சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? கிராம சபை கூட்டம் ரத்து குறித்து 'கமல்' கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை தமிழக அரசு நேற்று திடீரென ரத்து செய்தது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 3 தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் வலிமையானவை ஆகும். ஒரு கிராமத்திற்கு எது தேவை. எது தேவையில்லை என்பதே அவர்களே முடிவு செய்து தீர்மானம் போட முடியும்.

 Kamal Hassan condemned canceled the grama sabha meetings

அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் அந்த ஆண்டுகளில் திட்டங்களுக்கு செய்த செலவு கணக்கை மக்களுக்கு பொதுவெளியில் சொல்லியாக வேண்டும். அதேபோல் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அங்கே குரல் எழுப்பி அதற்கு மக்கள் பதிலும் பெற முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா அச்சம் காரணமாக தமிழத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை தமிழக அரசு நேற்று திடீரென ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன ? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? கொரோனா கால செலவு கணக்கை ? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவந்துவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை நமதே" என்று கூறியுள்ளார்.

இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வேளாண் சட்டத்துக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் அனைவரும் திரண்டஅச்சதால் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாகவும், அதிமுக அரசின் ஜனநாயக விரோத போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். திட்டமிட்டபடி ஊராட்சி தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் என்றும முக ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
The Tamil Nadu government has canceled the grama sabha meetings scheduled to be held in Tamil Nadu today. makkal neethi maiyam party leader Kamal Hassan has condemned this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X