Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா? காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல் ஹாசன் நினைத்தது நடந்துவிட்டது என நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அரவக்குறிச்சியில் இந்துக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஹைகோர்ட் கிளை

ஹைகோர்ட் கிளை

இதனால் ஆங்காங்கே போராட்டங்கள் தொடருகின்றன. உயர்நீதிமன்ற மதுரை கிளை கமலின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என கூறியிருந்தது.

நினைத்ததை சாதித்துவிட்டார்

நினைத்ததை சாதித்துவிட்டார்

இந்நிலையில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘ கமல் ஹாசன் சார் தேசிய கவனத்தையும் தமிழ்நாடு மீதான கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என நினைத்தார். அதை அடைந்தும் விட்டார்.

ஓட்டு கிடைக்காது

ஆனால் இந்துக்கள் குறித்து கருத்து தெரிவித்திருப்பதால் அவருக்கு வாக்கு கிடைக்கும் என்றும், இனியும் அவருக்கு இந்துக்களின் ஓட்டு கிடைக்கும் என்றும் எனக்கு தோன்றவில்லை. இவ்வாறு காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கடுப்பு

மீண்டும் கடுப்பு

ஏற்கனவே இந்து மதத்தை குறிப்பிட்டு வேறு மதத்தினர் வசிக்கும் பகுதியில் கமல்ஹாசன் பேசியது ஏன்? இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தானே. தவறான வார்த்தைகளை நியாயப்படுத்த வேண்டாம் என காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.

அதிக ஓட்டு கிடைக்கும்

இந்நிலையில் மீண்டும் கமலின் பேச்சுக்குறித்து காயத்ரி ரகுராம் தனது டிவிட்ட பக்கத்தில்பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் இடைத்தேர்தலில் கமல்ஹாசனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என நடிகை கஸ்தூரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+