பழைய திட்டங்களை தூசி தட்டி பட்ஜெட் தாக்கல்... ம.நீ.ம கருத்து
சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பல்வேறு கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2019 - 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நேற்று சட்டமன்றத்தில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் மின்சார பேருந்து இயக்கம், சென்னையில் வாகன நிறுத்த வசதி, விவசாயிகளுக்கு பயிர் கடன், ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி உள்பட பல்வேறு அறிவிப்பு இடம் பெற்று இருந்தன. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பட்ஜெட் குறித்து பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தமிழக பட்ஜெட் 2019 - 20 நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிறிய ஆய்வுக்குப் பிறகு மக்கள் நீதி மய்ய கருத்து எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள். நிதிநிலை அறிக்கை குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 2019-2020. நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிற்றாய்வுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்து. pic.twitter.com/84ucA1Abyi
— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2019
மேலும், நிதி ஒதுக்கீடு மட்டும் செய்து விட்டு, இரண்டரை ஆண்டுகளாய் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு இழுக்காகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள், இளைஞர்கள் மீனவர்களுக்குச் சிறப்பான வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை. சென்ற வருடம் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் தூசி தட்டப்பட்டு அறிவிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கஜா புயலால் பாதித்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவு என்றும் வேளாண்மை துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறைவு என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து, அத்திகடவு திட்டம், போன்றவற்றுக்கான நிதி எப்படி செலவிடப்படுகிறது என்பது குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்











Click it and Unblock the Notifications