என் கல்யாணத்தை கமல் அப்பா நடத்தி வைக்க போகிறார்.. துள்ளி குதிக்கும் சுஜா
சுஜாவருணி - சிவகுமார் திருமணத்தை முன்னின்று நடத்த போகிறாராம் கமல்.
Recommended Video

சென்னை: "அப்பா ஸ்தானத்தில் இருந்து என் கல்யாணத்தை நடத்தி வைக்க போறதே கமல்சார்தான்" என துள்ளி குதித்து கூறுகிறார் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை சுஜா வருணி.
தமிழ் சினிமாவில் சிறப்பு தோற்றம், மற்றும் குத்துப்பாட்டுகளில் வலம் வந்தாலும் சுஜா வர்ணிக்கு பெருமளவில் வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக நுழைந்தவுடன் ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.
[தமிழகத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. கோபியில் வீடுகளுக்குள் வெள்ளம்]

அடிக்கடி அழுதார்
இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சுஜா பேசும்போது, என் அப்பா சின்ன வயசுலேயே பிரிஞ்சு போய்ட்டார். என் அப்பா ஒருமுறை என் வீட்டுக்கு வந்தா போதும், என் கையால அவருக்கு சாப்பாடு போடணும்" என்று அடிக்கடி அழுதவாறே சொல்லிக் கொண்டு வந்தார்.

ஸ்வீட் ஷாக்
இதனை நிகழ்ச்சியில் கவனித்த கமல், "அவ்வளவுதானே, அப்பா வருகிறாரா என்று 3 மாசம் பாருங்கள் சுஜா... இல்லைன்னா உங்க வீட்டுக்கு சாப்பிட நான் வரேன்" என்று சொல்லி சுஜாவைவை மட்டும் அல்ல மீதமிருந்த போட்டியாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்தார். இது பற்றி ஒருமுறை சுஜா பேசும்போது, "என் அப்பா இப்போது வரை வரவேயில்லை. ஆனால் கமல் அப்பா வரப்போறதா சொன்னார். அவர் இப்போது வரவேண்டாம். என் கல்யாணத்துக்கு வரட்டும். அவரே வந்து என் கல்யாணத்தை நடத்தி வைக்க ஆசைப்படறேன்" என்று சொல்லி இருந்தார்.

நேரில் பத்திரிகை
இதனிடையேதான் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் மகன் சிவாஜி தேவ் என்ற சிவக்குமாருடன் லவ் ஆகி அது கல்யாணத்தில் வந்து முடிந்துள்ளது. இந்த கல்யாணத்தை கமல்ஹாசன்தான் நடத்தி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற நவம்பர் 19-ம் தேதி கல்யாணம் என்று முடிவாகி உள்ளது. அதற்காக பிரபலங்களை நேரில் சந்தித்து இருவரும் கல்யாண பத்திரிகையை நேரில் வைத்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அப்பா கமல் தலைமை
அதன்படி இருவரும் தங்களது முதல் கல்யாண அழைப்பிதழை சுஜா வருணி கமலை சந்தித்து நேரில் வைத்துள்ளார்கள். இதுபற்றி சுஜா கூறும்போது ‘என் அப்பா கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் இறந்தார். அதனால் என் அப்பா ஸ்தானத்தில் இருந்து என் கல்யாணத்தை கமல் நடத்தி வைக்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்தே என் கல்யாணத்தை நடத்தி வைக்க அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். இப்போ என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்' என்று மகிழ்ச்சி துள்ளலுடன் கூறினார்.

டவுள் சந்தோஷம்
மறைந்த நடிகர் திலகத்துக்கு தான் தான் மூத்த மகன் என்று அடிக்கடி கமல் சொல்லி பூரித்து போவார். தற்போது சிவாஜியின் பேரனின் திருமணத்தை முன்னின்று நடத்துவதில் கமலுக்கு டபுள் சந்தோஷம்தான்!!












Click it and Unblock the Notifications