சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபிநந்தன் காட்டுவது வீரம் அல்ல... என்ன கமல்.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க?

Google Oneindia Tamil News

Recommended Video

    அபிநந்தன் காட்டுவது மட்டுமே வீரம் அல்ல: கமல்

    சென்னை:அபிநந்தன் காட்டுவது வீரம் அல்ல என்று கல்லூரி விழாவில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பேசியதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று மக்கள் குழம்பி வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமலஹாசன் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடி வருகிறார். வட இந்தியாவில் முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பேசி வருகிறார்.

    இந் நிலையில், வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அந்த உரையாடல் விவரம் வருமாறு:

     ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு சிகிச்சை.. நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன் ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு சிகிச்சை.. நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்

    மாணவர்கள் கேள்வி, பதில்

    மாணவர்கள் கேள்வி, பதில்

    கேள்வி: மய்யம் என்ற வார்த்தை எப்படி உங்களிடம் உருவானது?

    பதில்: இது நான் கண்டு பிடித்த ஒன்று அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியது. அது என்னுள் வராமல் இருந்து இருந்தால் தான் ஆச்சர்யம். புயலில்கூட அமைதியான இடம் என்பதே மையம் என்ற வார்த்தையின் அர்த்தம்.

    தீர்வுதான் என்ன?

    தீர்வுதான் என்ன?


    கேள்வி:
    வேலையில்லா திண்டாட்டம், கல்வித் தரம் குறித்து நீங்கள் முதல்வரானால் என்ன தீர்வு காண்பீர்கள்?

    பதில்: இது பல முறை என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. வேலையில்லா திண்டாட்டத்துக்கு அரசும் கல்வியும் தான் காரணம். உங்கள் முன் இதை பேசுவதற்கு பதற்றம் இல்லை. உலகத்தின் தேவை 9 லட்சம் பொறியாளர்கள். அவற்றை இந்தியாவிலேயே தயார் செய்துவிட்டால் எப்படி வேலை கிடைக்கும்?

    நிலைமை மாறும்

    நிலைமை மாறும்

    ஒரே பாடத்திட்டத்தை எல்லோரும் படிக்கும் நிலையை மாற்றி அவரவர்களுக்கு பிடித்த துறையை படித்து அந்த துறைக்கு சென்றால் நிலை மாறும். பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இல்லாமை இல்லாத நிலையாகி விடும்.

    சாக்கடை சுத்தம்

    சாக்கடை சுத்தம்

    கேள்வி: உங்களுக்கு ஆதரவாக நாங்களும் இறங்குகிறோம் என்றாலும் சாக்கடை சுத்தமாகி விடுமா?
    பதில்: பானையில் இருக்கும் நல்ல தண்ணீரை துளிகூட சாக்கடைக்குள் இறங்க விடக்கூடாது. என்னை போன்றோரை சாக்கடையில் இறக்கி சுத்தம் செய்ய வைத்து அதன் பின்னர் பானை தண்ணீரை குடிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

    அபிநந்தனின் வீரம்

    அபிநந்தனின் வீரம்

    இறங்கினால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் அதற்கு பயந்து கொண்டு நின்றுகொண்டே இருக்க முடியாது. எல்லையில் அபிநந்தன் காட்டுவது மட்டுமே வீரம் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் காட்ட வேண்டியது இந்த வீரத்தை தான். நாம் எல்லோரும் இறங்கினால் சாக்கடை நிச்சயம் சுத்தமாகி விடும்.

    இணக்கம் தான் வேண்டும்

    இணக்கம் தான் வேண்டும்

    உங்களிடம் நான் வணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இணக்கத்தை எதிர்பார்க்கிறேன். நம்முடைய தவறுகள் தான் சாக்கடையாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை சுத்தம் செய்வது நம் கடமை என்று கமலஹாசன் கூறினார்.

    English summary
    Kamal Haasan spoken in the college function that Abhinanthans activity is not heroism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X