"செம சீன்".. ஜெய்பீம் அல்லியும். தேவர் மகன் கவுதமியும்..! ஒரே வீடியோவில் போட்டு உடைக்கப்பட்ட உண்மை!
ஜெய்பீம், தேவர் மகன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது
சென்னை: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. தேவர் மகன் படக்காட்சி மற்றும் ஜெய்பீம் படக்காட்சியை ஒப்பிட்டு அந்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது.
தேவர் மகன் தமிழின் மிக முக்கியமான படம்... கமலஹாசனின் சாதி ஒழிப்பு கருத்தியலில் நேர்மை இல்லாமல் இல்லை... ஆனால், படத்தின் சில காட்சிகளில் சாதி வன்மம் புகுத்தப்பட்டதாகவே விமர்சனங்கள் அப்போது எழுந்தன.
"பெரியத்தேவர் மகன்" என்ற வார்த்தையை படத்தின் பல இடங்களில் சக்தி சொல்லி கொண்டே இருப்பார்.. அப்படி சொல்லும்போது அவருக்கான சாதிய அடையாளம் இருப்பதாகவே பளிச்சென தெரியும்.. அதேபோல, கௌதமியை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, "ராஜு-ன்னு.. நம்ம தேவருக்கு சமமான சாதி ஐயா என்று உயர்சாதி குறிப்பிட்டு, அதையும் ஒரு மதிப்பீட்டாகவே பதிவு செய்திருப்பார்.
|
பெண்ணுரிமை
ஆனால் இப்போது அது விஷயமில்லை.. இந்த படத்தில் ஒரு சீனில் சிவாஜி, கமல் சேர்ந்து சாப்பிட உட்கார்வார்கள்.. அப்போது கௌதமியும் வந்து சாப்பிட உட்காருவார்.. அவர் எப்போதும் போல் இயல்பாகவே வந்து உட்காருவதை பார்த்த கமல், ஒரு கணம் பதறி போவார்.. சிவாஜி முன்பு அடக்கம் ஒடுக்கமாக உட்காரும்படி சைகை செய்வார்.. அதாவது பெரியவர்கள் முன்பு பெண்கள் எப்படி உட்கார வேண்டும் என்பதை கௌதமிக்கு எடுத்தியல்புவார்.. ஆண்களுக்கு சமமாக பெண்களையும் சேர்ந்து உட்காருவதை அனுமதிக்காத சமூக போக்கின் வெளிப்பாடாக இந்த காட்சி பார்க்கப்பட்டு வருகிறது. பார்க்கப்பட்டது.

சூர்யா
இதைதான் ஜெய்பீம் பட காட்சியுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.. பழங்குடியினர் ஜாதியை சேர்ந்த சிறுமி அல்லி, சூர்யா எதிரே வந்து சேரில் உட்கார்ந்து கொண்டு, அவரைப்போலவே நியூஸ்பேப்பர் வாசிப்பார்.. சூர்யாவை போலவே கால் மீது கால் போட்டு உட்கார முயல்வார்.. அப்போது சூர்யா அதை திரும்பி பார்க்கிறார்.. உடனே சிறுமி ஒருவித தயக்கம் காட்டுகிறார்.. பிறகு சூர்யா கண்களாலேயே தைரியம் ஊட்டுகிறார்.. அடர்ந்த தெம்பையும், கனத்த நம்பிக்கையையும் தன் பார்வையாலேயே அந்த பெண்ணுக்கு கடத்துகிறார்..

உரிமை
இதற்கு பிறகு அந்த சிறுமி, கால் மேல் கால் போட்டு நிமிர்ந்து உட்காருகிறார்.. விளிம்பு நிலை மக்களுக்கு இதுவரை கிடைக்காத உரிமையை, மொத்தமாக மீட்டுவிட்ட சந்தோஷம் அந்த ஒரு சீனில் தெறித்து செல்லும். சுருக்கமாக சொன்னால், மக்களை எந்தவிதமாகவும் உணர்ச்சிவசப்படுத்தாமல், ஒரு ஆழமான புரிதலை இந்த ஒரு சீனில் ஏற்படுத்தி இருப்பதை உணர முடியும்.

பெண்ணுரிமை
அதாவது, தேவர்மகனில், சுயமரியாதையும் பெண்ணுரிமையும் கிடைக்காத நிலையில், ஜெய்பீம் படத்தில் அது கிடைத்துவிட்ட நிம்மதி உணர்வு தென்படுகிறது.. இதைதான் நெட்டிசன்கள் இன்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்... ஆனாலும், இந்த ஒப்பீடு சரியானதா? பொருத்தமானதா? என்பதையும் நாம் பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது..

தேவர் மகன்
தேவர் மகனை பொறுத்தவரை, பெரிய தேவருக்கு பெண்கள் மீதான மதிப்பீடு அவ்வளவுதான்.. அவர் அப்படித்தான் பெண்களை உட்கார சொல்வார்.. அது அவர் இயல்பு.. ஆனா சக்திவேல் இந்த மனப்பான்மைக்கு அப்பாற்பட்டவர்.. தன் மனைவியை தனக்கு சமமாக உட்கார வைத்துதான் பாட்டு பாடுவார்.. படம் முழுவதும் மனைவிக்கான முக்கியத்துவத்தை தந்து மரியாதையுடன் நடத்துவார்.. எனவே, இது காலமாற்றம் என்பதாகக்கூட எடுத்து கொள்ளலாம்.. அன்று கணவனை பெயர் சொல்லி அழைக்காத நிலையில், இன்று வாடா போடா என்று அழைப்பதில்லையா? இன்று உரிமையும், சுதந்திரமும் இதே பெண்களுக்கு கிடைத்துள்ளதே என்கிறது ஒரு தரப்பு.

விவாதம்
மற்றொரு புறம், பெண்ணுரிமை என்பது அடுத்தவர் போடும் பிச்சை கிடையாது.. தங்களுக்கானதை தாங்களே எடுத்து கொள்ளும் கருத்தியல்.. அடிப்படை உணர்வு.. இயல்பான உரிமை.. இதைதான் துணிந்து சொல்கிறது ஜெய்பீம் என்கிறது மற்றொரு தரப்பு.. ஆக மொத்தம், இரு வேறு கருத்துக்களை தாங்கி வருவதுடன், மீண்டும் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை களத்தை உருவாக்கி வருகிறது ஜெய்பீம்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications