சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதை கவனிச்சீங்களா.. திருச்சியில் கமல் சொன்ன "அந்த" வார்த்தை.. மிரண்டு பார்க்கும் திராவிட கட்சிகள்!

திருச்சியில் கமலின் பிரச்சாரம் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சியில் கமல், பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, அறிவித்த ஒரு முக்கிய கோரிக்கை தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Recommended Video

    திருச்சி: போகும் இடம் எல்லாம் உற்சாக வரவேற்பு.. ஃபுல் ஃபார்மில் கமல்..!

    இன்று திருச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசன், பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, "யார் யார் எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்ற லிஸ்ட் போடுவதில் சந்தோஷம் இல்லை... நாங்கள் அந்த வழியில் செல்ல போவதுமில்லை... நான் நாகரிக அரசியல் செய்ய நினைக்கிறேன்..

    அந்த வகையில், உடல் ஊனமுற்றோரின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற, உடல் ஊனமுற்ற ஒருவரை சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம்.. அவர்களை வெற்றிபெற வையுங்கள். உங்களுடைய தேவைகளை அவர் செய்துகொடுப்பார்.." என்றார்.

    கமல்

    கமல்

    கமலின் இந்த அறிவிப்புதான் வழக்கம்போல ஆச்சரியங்களை அள்ளி வருகிறது.. கமலின் தேர்தல் அணுகுமுறையே மற்ற அரசியல் கட்சிகளை போல இல்லாமல் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கிறது.. அதனாலயே கமலின் பிரச்சாரங்களுக்கு மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களாக கட்சி சாராத, மக்கள் செல்வாக்கு உள்ள 30 சதவீதம் பேரை களமிறக்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

    டாக்டர்கள்

    டாக்டர்கள்

    இதுவிர, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் டாக்டர், எந்த கட்சியையும் சாராமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து இயங்கி வரும் சமூக ஆர்வலர் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியை சாராத மக்கள் செல்வாக்கு உள்ள நபர்களை வேட்பாளராக களமிறக்கவும் முடிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.. இதற்காக நடந்து முடிந்து செயற்குழு கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாம்.

     திருச்சி

    திருச்சி

    இப்படிப்பட்ட செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்தான், கமலின் இன்றைய நாள் அறிவிப்பும் வெளியாகி உள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்புகூட கமல் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் குறைந்தது 20 பெண்கள் அமைச்சர்களாக இருப்பார்கள்" என்று பதிவிட்டார்.

     உடல் ஊனமுற்றோர்

    உடல் ஊனமுற்றோர்

    அதேபோல, கடந்த எம்பி தேர்தலிலேயே பெண் வேட்பாளர்களுக்கு மய்யம் தந்த முக்கியத்துவம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டதுதான். அந்த வகையில், உடல் ஊனமுற்றோரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற, உடல் ஊனமுற்ற ஒருவரைச் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம் என்ற கமலின் திருச்சி முழக்கம், திராவிட கட்சிகளின் புருவத்தை உயர வைத்து வருகிறது.

    English summary
    Kamalhasans Trichy Campaign and announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X