காமராஜர் நினைவு தினம் - கல்வித்தந்தை காமராஜருக்கு முதல்வர் துணை முதல்வர் புகழாரம்
காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்படும் இன்றைய தினத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வமும் கர்மவீரர் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
சென்னை: வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்தவர் காமராஜர் தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தையை அவரது நினைவு நாளில் வணங்கி மகிழ்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் வறியவர் வாழ்வில் ஒளியேற்றிய கலங்கரை விளக்கம் காமராசர் நினைவுநாளில் போற்றி வணங்குவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 45 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேர்மை, எளிமையின் திருவுருவம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் தந்த கல்வி வள்ளல் வறியவர் வாழ்வில் ஒளியேற்றிய கலங்கரை விளக்கம் காமராசர் அவர்களின் நினைவுநாளில் பெருந்தலைவர் அவர்களை போற்றி அவர் வழியில் ஏழைகளை வாழ்வில் உயர்த்துவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications