இன்று காமராஜர் பிறந்தநாள்! தமிழ்நாட்டை கல்வியால் உயர்த்திய பெருந்தலைவர்.. தமிழக அரசின் மாஸ் ஏற்பாடு!
சென்னை: பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்துகின்றனர். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர், விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார் காமராஜ்.

காமராஜர் வாழ்க்கை: 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார் காமராஜர். தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார்.
மேலும், 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
ஏழைகள் படிக்க: ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராசர், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் 'கிங் மேக்கராக’ விளங்கினார். காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
கல்வி வளர்ச்சி நாள்: 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளினை "கல்வி வளர்ச்சி நாளாக" அறிவித்தார். அதன்படி காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
காமராஜர் பிறந்த நாளில் சூப்பர் திட்டம்: தொடர்ந்து, காமராஜரின் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
'ஜாக்பாட்’.. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.
முக.ஸ்டாலின் 15,7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
-
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications