டிடிஎப் வாசனுக்கு நூதன தண்டனை கேட்ட வக்கீல்.. அஞ்சுவது அஞ்சாமை பேதமை.. திருக்குறள் கூறிய நீதிபதி
சென்னை: அஞ்சுவது அஞ்சாமை பேதமை ' என்ற திருகுறளுக்கு இணங்க சாகசம் செய்பவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்யக்கூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கருத்து கூறியுள்ளார். டிடிஎப் வாசனின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி பொது இடங்களில் சாகசம் செய்வது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
பைக் சாசகம் செய்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளவர் டிடிஎப் வாசன். மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் டிடிஎஃப் வாசன். கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் ஆஜர் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ஒன்றில் , டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஜாமீன் மனுவை நீதிபதி இனியா கருணாகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை டி.டி.எப் வாசன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வெங்கட்ராமன் ஆஜராகி, தனது கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். வாசனுக்கு கைகள் உடைந்து இன்னும் அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தால் வாகனத்தை தொட மாட்டார். ஏற்கனவே நாங்கள் லைசன்ஸ் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
அவருக்கு தமிழ்நாடு முழுவதும் நிறைய பாலோவர்ஸ் இருக்கிறார்கள் அவர் இனி இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் கூட ஒரு டிரைவர் வைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். நூதன தண்டனை ஏதாவது கொடுத்தால் கூட நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என வாதத்தை முன் வைத்தார்.
அரசு தரப்பு வழக்கரறிஞராக ஆஜராகிய கார்த்திகேயன், சுமார் 40 லட்சம் பாலோவர்ஸ்கள் டி.டி. எஃப் வாசனுக்கு இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது இடத்தில் கூட பிறரை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குகிறார். இவருக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன் உதாரணமாக அமையும். யார் வேண்டுமென்றாலும் வாகனத்தை, எப்படி வேண்டுமானாலும், இயக்கிவிட்டு ஜாமினில் வெளி வந்துவிடலாம் என கமெண்ட் செய்வார்கள் என்று வாதிட்டார்.
இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விபத்துக்குள்ளான வாகனம் குறித்து கேட்டறிந்தார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனமா அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனமா என கேட்டார். இதனை அடுத்து போக்குவரத்து புலனாய்வு செய்யப்பட்டுள்ளதாக கேள்வியை எழுப்பிய அவர், உடனடியாக போக்குவரத்து புலனாய்வு பணியை முடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் , ' அஞ்சுவது அஞ்சாமை பேதமை ' என்ற திருகுறளுக்கு இணங்க சாகசம் செய்பவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்யக்கூடாது. அப்படி செய்வது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் அவர் பயன்படுத்திய வெளிநாட்டு பொருட்களுக்கு அனுமதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications