இறப்புச் சான்றிதழுடன் மாமல்லபுரம் ஓட்டல் வாசலில் கந்தசாமி.. ரூம் ரூமாக போய் விஜய் அழுது சொன்னது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காகவே அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி, போக்குவரத்து வசதி அனைத்தும் செய்யப்பட்டிருந்தது.. எனினும் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் வாசலில் திடீரென சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. அது என்ன தெரியுமா?

கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது.

Mamallapuram Death Certificate Vijay

இந்த துயர சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்திருந்தார். அதன்படியே உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வீடியோ கால் சந்திப்பு

அதேபோல இறந்தவர்களின் குடும்பத்தினரை வீடியோ காலில் சந்தித்து பேசிய விஜய், அவர்களுக்கு தன்னுடைய ஆறுதலை வழங்கினார்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். அப்போது கரூர் வந்து சந்திப்பதாக உறுதி கூறியிருந்தார். ஆனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக விஜய்யால் கரூருக்கு செல்ல முடியவில்லை.

இதனால் மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து அவர்கள் நேற்றிரவு மாமல்லபுரம் வந்தடைந்தனர். அவர்கள் அனைவருமே ஏற்கனவே புக் செய்யப்பட்டிருந்த ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

கண்ணீர் விட்ட விஜய்

காலை உணவுக்கு பிறகு விஜய், அவர்கள் தங்கியிருக்கும் ஒவ்வொரு அறைக்கும் சென்றிருக்கிறார்.. அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் போட்டோக்களுக்கு விஜய் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.. பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கண்ணீர் விட்டு பேசியிருக்கிறார்.. மேலும் நேரில் வந்து சந்திக்க முடியாததற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டாராம்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை நிச்சயம் கரூருக்கு மீண்டும் வந்து நேரில் சந்திப்பதாகவும் விஜய் அவர்களிடம் வாக்குறுதி தந்தாராம். இந்த சந்திப்பு முடிந்ததுமே அனைவருமே மாலையில் கரூர் திரும்ப ஆம்னி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மோகன் அப்பா கந்தசாமி

ஆனால், கரூரில் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த, விஜய்யை சந்திக்க இன்றைய தினம் படாதபாடு பட்டுள்ளார்.. ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் மோகன்.. இவருக்கு 19 வயதாகிறது.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மோகனும் உயிரிழந்துவிட்ட நிலையில், மோகனின் அப்பா கந்தசாமியை தவெகவினர் மகாபலிபுரத்துக்கு அழைத்து வரவில்லையாம். இதனால் கந்தசாமி மட்டும் தனியாகவே மகாபலிபுரம் வந்துள்ளார்...

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கந்தசாமி சொல்லும்போது, "மாமல்லபுரத்தில் விஜய்யை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு என்னுடைய மனைவி, உறவினர்களை அழைத்து வந்துவிட்டாங்க.. ஆனால் பெத்த அப்பனான என்னை கூட்டிட்டு வரல.. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் உள்ளேயும் போக என்னை அனுமதிக்கல..

20 லட்சத்துக்கு குறி

கட்சிக்காரர்கள் சொன்னால்தான் உள்ளே போக அனுமதிக்க முடியும் என்று சொல்லிட்டாங்க.. மாவட்ட செயலாளருக்கு போன் செய்தால் அப்படியொரு கூட்டம் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

எனக்கு கல்யாணம் நடந்து 35 வருஷம் ஆகிறது. ஆனால் இந்த 13 வருஷமாக என் மனைவிக்கு கண் தெரியாது. அப்போதிருந்தே நான் தான் மனைவியை எல்லாமே பார்த்துக்கொண்டு வருகிறேன்.

இப்போது இந்த 20 லட்சம் பணம் வந்ததுமே, மனைவியின் உறவினர்கள் அதை கையாள நினைக்கிறார்கள்.. அதுக்காக என்னை ஒதுக்கிவிட்டு, எனக்கு தெரியாமல் மனைவியை இங்கே அழைத்து வந்து விட்டார்கள். மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது என்று என்னிடம் சொல்லிவிட்டு என் மனைவியை அழைத்து வந்துவிட்டனர்.

இறப்புச் சான்றிதழ்

விஷயம் கேள்விப்பட்டு, இப்போது நான் தனியாக பஸ் பிடித்து வந்துள்ளேன். என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கட்சிகாரர்கள் சொன்னால்தான் உள்ளே விடுவார்களாம்:" என்றார்.

இதையடுத்து கந்தசாமி ஓட்டல் வாசலில் காத்திருக்கும் விஷயம் தெரிந்ததுமே, தவெகவினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் கந்தசாமி, கையோடு எடுத்து வந்திருந்த மகனின் இறப்பு சான்றிதழை எடுத்து காட்டினார்.. அதற்கு பிறகே அவரை தவெகவினர் உள்ளே அழைத்து சென்றனர்.. இதனால் சிறிது நேரம் ஓட்டல் வாசலில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+