Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.. விரைவில் பேச்சுவார்த்தை குழு! கனிமொழி

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் இதற்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தனி நபர் பேசுவதற்கு எல்லாம் ஒரு கட்சி பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என கனிமொழி கூறியுள்ளார்.

மேலும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க விரைவில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும் கனிமொழி எம்பி கூறியிருக்கிறார்.

Kanimozhi Dismisses Speculation Over DMK Congress Alliance Says No Rift

திமுக தலைமையிலான கூட்டணி

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இந்த முறையும் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, கூட்டணியில் ராமதாஸை இணைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பேசப்பட்ட்டது.

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்

இதேபோல் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்டமாக திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பில் கிரிஷ் சோடங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக இதுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

ஏற்கனவே காங்கிரசில் உள்ளவர்கள் ஆட்சியில் பங்கு, 40 தொகுதிகள் வேண்டும் என்று பேசி வருவதும், திமுகவையே ஒரு சில தலைவர்கள் குறை சொல்வதும் திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திமுக தலைமை நேரடியாக சொல்லாவிட்டாலும் அமைச்சர்கள் அவ்வப்போது பேசி வருகிறார்கள்.

கனிமொழி எம்பி பதிலடி

இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, திமுக காங்கிரசில் தான் விரிசல் விழுந்து இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் திமுக காங்கிரஸ் தலைவர்கள் இடையே இணக்கமான உறவு நீடித்து வருகிறது என்றும், விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது:- கடந்த தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 400-க்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு எதிராக செயல்படுவதால் சில வாக்குறுதிகள் மட்டுமே செயல்படுத்த முடியாத நிலை நிலவுகின்றது.

விரைவில் பேச்சுவார்த்தைக் குழு

திமுக தலைமைக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே இணக்கமான நல்லுறவு இருந்து வருகிறது. தேர்தலில் திமுக - காங்கிரஸ் இணைந்து செயல்படும். தனி நபர் பேசுவதற்கு எல்லாம் ஒரு கட்சி பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. விரைவில் பேச்சுவார்த்தைக் குழுவானது அமைக்கப்படும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+