உக்ரைனில் உக்கிரமான போர்.. ட்விட்டரில் வந்த கோரிக்கை.. நடவடிக்கை எடுத்த கனிமொழி!
சென்னை: உக்ரைன் லிவிவ் நகரில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் நிலையை அறிந்த திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு உதவுவதாகவும் மாணவர்களின் விவரங்களை தருமாறும் கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்யா போரிட்டு வருகிறது. இன்று 9ஆவது நாளாக இந்த போர் மூர்க்கத்தனமாக நடந்துள்ளது. உக்ரைனில் உள்ள நீர் மின்நிலையம், விமான நிலையம், முக்கிய கட்டடங்களை ரஷ்யா அழித்து வருகிறது.
உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்துள்ளன. உக்ரைன் ராணுவமும் ரஷ்யாவுக்கு தீரமிக்கதொரு பதிலடியை கொடுத்து வருகிறது. உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அங்கு தங்கி பயின்று வருகிறார்கள்.

உக்ரைன்
உக்ரைனில் ஆங்காங்கே குண்டு மழை பொழிவதால் பதுங்கு குழிகளில் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மீட்கப்பட்டு வரும் போதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்வதறியாது தத்தளித்து வருகிறார்கள்.

உணவு வாங்க முடியாமல் தவிப்பு
உணவு வாங்க வெளியே சென்ற கர்நாடகா மாணவர் ஒருவர் ரஷ்ய தாக்குதலில் கடந்த சில நாள்களுக்கு முன் பலியானார். இதனால் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இந்திய மாணவர்கள் உள்ளனர். ஒரே பதுங்குகுழியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அங்கு மூச்சுவிட முடியாமல் சிரமத்தை சந்திக்கிறார்கள். ஒரே கழிப்பறையை அனைவரும் பயன்படுத்தும் நிலை உள்ளது.

துன்பங்கள்
இவ்வாறு பல துன்பங்களை அனுபவிக்கும் இந்திய மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தங்களை யாராவது மீட்பார்களா என எதிர்நோக்கி காத்துக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் உக்ரைனில் லிவில் நகரில் தமிழக மாணவர்கள் ஏராளமானோர் சிக்கித் தவிப்பதாக திமுக எம்பி கனிமொழிக்கு அங்கிருந்து தகவல் கிடைத்தது. யாரோ சிலர் இந்திய அதிகாரிகள் என கூறிக் கொண்டு ஐடி கார்டு இல்லாமல் வந்து மாணவர்களை எல்லைக்கு கொண்டு செல்வதாக அழைப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளதாக ட்விட்டரில் வானதி சேதுபதி என்பவருக்கு வந்த புகாரை திமுக கனிமொழி எம்பிக்கு அனுப்பியிருந்தார்.

உதவ முன் வந்த கனிமொழி
அதில் இந்த மாணவர்களுக்கு உதவ முடியுமா என்றும் அந்த மருத்துவர் கேட்டிருந்தார். இதையடுத்து கனிமொழி எம்பி அந்த மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட தான் தயாராக இருப்பதாகவும் உடனடியாக அந்த மாணவர்களின் விபரங்களைத் தருமாறும் டிவீட் செய்திருக்கிறார். இதற்கு டாக்டர் வானதி சேதுபதி நன்றி தெரிவித்து மாணவர்களின் வாட்ஸ் ஆப் எண்களையும் உக்ரைன் எண்ணையும் அனுப்பியுள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications