சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மண்ணுக்காக.. உரிமைக்காக.. போராடி உயிர் நீத்தவர்களுக்கு என் அஞ்சலி.. கனிமொழி ட்வீட்

துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு கனிமொழி அஞ்சலி செலுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், நம் மண்ணுக்காகவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி உயிர் நீத்தவர்களுக்கு கனிமொழி எம்பி தனது அஞ்சலியை தெரிவித்து கொண்டுள்ளார்.

தூத்துக்குடிக்கும் கனிமொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஸ்டெர்லைட் பிரச்சனை எழுந்தபோது, உடனடியாக அங்கு சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார் கனிமொழி. போராட்ட குழுவினருடன் இணைந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்.

ஸ்டெர்லைட் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு ஒருமுறை ட்விட்டரில் கனிமொழியிடம் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு.. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு.. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு

நிலைப்பாடு

நிலைப்பாடு

அதற்கு "ஆலையினால் காற்று, தண்ணீர் மாசுபடுகிறது, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. நிச்சயமாக இப்போது மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் இனி எந்த காரணத்திற்காகவும் திறக்கக் கூடாது என்பதே என் நிலைப்பாடு.

கலவரம்

கலவரம்

இதற்காக போராடிய மக்களுடன் எப்போதும் உறுதியாக துணை நிற்பேன். 13 பேர் கொல்லப்பட காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது அரசாங்கமே ஏற்படுத்திய கலவரத்தால் நடந்திருக்கக் கூடிய துப்பாக்கிச்சூடு" என்று பதில் அளித்திருந்தார்.

அஞ்சலி

இந்நிலையில், மண்ணுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி துப்பாக்கி சூட்டில்உயிர் நீத்தவர்களுக்கு கனிமொழி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது சம்பந்தமாக தனது ட்வீட்டில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் #ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய நம் மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஓராண்டு நிறைவுநாள் இன்று. நம் மண்ணுக்காகவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்தவர்களுக்கு என் அஞ்சலி!" என பதிவிட்டுள்ளார்.

தண்டிக்கப்படுவர்

மற்றொரு ட்வீட்டில், "கழகத் தலைவர் தளபதி அவர்கள் உறுதியளித்தது போல் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குற்றமிழைத்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
MP Kanimozhi pays tribute to Thoothukudi Gunshoot first year anniversary today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X