வீட்டு தபால் பெட்டியில் வீசப்பட்ட அழைப்பிதழ்! மதுரை பயணத்தை ரத்து செய்த கனிமொழி! அப்செட் பின்னணி!
சென்னை: மதுரையில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளாததற்கு காரணம், அவருக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப்படாததே என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள். ஆராய்ச்சியாளர்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள், பெண்கள். மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்நூலகமானது தென் தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக திகழும் என பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் இந்த நூலகத்தின் திறப்பு விழாவுக்கு கனிமொழி எம்.பி. வராதது திமுகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. கருணாநிதியின் கலை இலக்கிய வாரிசாக கருதப்படும் கனிமொழி தான் இந்த நூலக திறப்பு விழாவில் முதல் ஆளாக கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ மதுரை பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னையில் இருந்துவிட்டார்.
இதற்கான காரணம் பற்றி விசாரித்ததில், கருணாநிதி நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வீட்டு தபால் பெட்டியில் வைத்து விட்டுச் சென்றதே எனக் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவோ, அல்லது பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளோ தன்னிடம் திறப்பு விழா பற்றியோ அழைப்பிதழ் குறித்தோ ஒரு வார்த்தை கூடச் சொல்லாதது கனிமொழிக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா விவகாரத்தில் டி.ஆர்.பாலுவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கால் பங்கு கூட கனிமொழிக்கு கொடுக்கப்படவில்லை என்பது அவரது தரப்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் தான் அவர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதேபோல் பேராசிரியர் அருணனுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட விவகாரத்திலும், அழைப்பிதழில் மதுரை எம்.பியின் பெயர் விடுபட்டதும் பெரிய சொதப்பலாக பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications