அப்பா இல்லாத உணர்வு இருக்கு! உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி? கனிமொழி பளிச் பதில்!
சென்னை: சென்னை சங்கமத்தின் போது நடைபெறவுள்ள உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி உண்டா என்ற கேள்விக்கு உணவு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவு என பளிச் பதிலளித்துள்ளார் கனிமொழி எம்.பி.
மேலும், சென்னை சங்கமம் நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பப்படும் என்றும் அதற்காக வீட்டிலேயே இருந்து பார்த்துக் கொள்ளலாம் என நினைக்காமல் நேரில் வந்து பார்க்குமாறு கனிமொழி எம்.பி. மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக இதுவரை தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது கனிமொழி பேசியதாவது;

அப்பா இல்லாத உணர்வு
''நிச்சயமாக அப்பா இல்லாத ஒரு உணர்வு எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் அதே ஆர்வத்தோடு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று நினைக்கிறார். முன்னர் ஒரு தனிப்பட்ட நிறுவனம், அரசாங்க உதவியோடு வெளியில் இருந்துதான் இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்தோம். இந்த முறை அரசே ஏற்று நடத்தக்கூடிய அளவுக்கு சென்னை சங்கமம் இந்த ஆண்டிலிருந்து அரசு நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. அதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிமேல் தொடர்ந்து நடப்பதற்கா

நாட்டுப்புற கலைஞர்கள்
''இப்போது பொது தளங்களில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒரு வழியாக இருந்தது. ஆதலால், இன்னும் மறுபடியும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை வளர்க்கக்கூடிய விஷயமாக இருக்கும். அதைத்தாண்டி, மக்களுக்கு நம்முடைய மண் சார்ந்த கலைகள் இவ்வளவு இருக்கிறது என்பதை அடுத்த தலைமுறைக்கு இது கொண்டு போய் சேர்க்கக்கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.''

லைவ் இருக்கு
''சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை பொறுத்தவரை சில இடங்களில் நிச்சயமாக live இருக்கும் (Inaugural Show கண்டிப்பாக ஒளிபரப்பப்படும்). ஒவ்வொரு நாளும் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்த நாள் இணைய தளங்களில் போடப்படும். அதற்காக நீங்கள் வீட்டிலிருந்தபடியே பார்க்க வேண்டாம். நேரில் வந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.''

மாட்டிறைச்சி
உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி உண்டா என்ற கேள்விக்கு '' உணவு என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவு (Personal Decision) அதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை.'' என கனிமொழி பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications