Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மீது கண்ணதாசனுக்கு இத்தனை உயிரா? கவிஞர் என்ன செய்தார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவலையில்லா மனிதன் என்ற திரைப்படத்தில் வந்த பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய் என்ற பாடலை யாருடைய நினைவாக கண்ணதாசன் எழுதினார் தெரியுமா?

காதல், ஊடல், கோபம், அமைதி, துக்கம், ஜாலி, மெலடி, தத்துவம் உள்ளிட்ட எல்லாவற்றிற்கு பாட்டு எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இவர் 1927ஆம் ஆண்டு பிறந்தார். இது வரை 5000 பாடல்களை எழுதியுள்ளார்.

Kannadasan was very upset on death of Pattukottai Kalyana sundaram

அது போல் 6000 கவிதைகள் 232 புத்தகங்களை படைத்துள்ளார். பாரதிக்கு பிறகு சிறந்த நவீன தமிழ் புலவராக கண்ணதாசன் கருதப்பட்டதால் அவர் கவிஞர் என்ற அடைமொழியுடன் அடைக்கப்படுகிறார். இவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியுள்ளார். அது போல் சேரமான் காதலி என்ற நாவலை எழுதியதால் அவருக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது இயற்பெயர் முத்தையா.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெயசங்கர், ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் மூன்றாம் பிறை படத்தில் இருந்து கண்ணே கலைமானே பாடல்தான். மனிதர்களின் அனைத்துவிதமான உணர்ச்சிகளுக்கும் தனது கவிதை மூலம் உயிர் கொடுத்தவர் கண்ணதாசன்.

தனக்கு போட்டியாக எந்த கவிஞர் பாடல் எழுத வந்தாலும் அவர்களுடன் நெருங்கி பழகி நட்பு பாராட்டுவதில் கண்ணதாசன் வல்லவர். அந்த வகையில்தான் கண்ணதாசன் பாடல் எழுத வந்த போது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பாடல் எழுதி கொண்டிருந்தார். இதனால் கண்ணதாசனுக்கு வசனம் எழுத அதிக வாய்ப்பு கிடைத்தது.

பிறகுதான் கண்ணதாசனுக்கு பாடல்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் மூடநம்பிக்கையை குழிதோண்டி புதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இரு கவிஞர்களும் புதிது என்பதால் இருவரும் எந்தவித பந்தாவும் இல்லாமல் இருவரும் நட்பு கொண்டனர். தன்னிடம் பாடல் கேட்டு யார் வந்தாலும் அந்த பாடலுக்கு கண்ணதாசன் வரிகள் சரியாக இருக்கும் என பட்டுக்கோட்டையார் நினைத்தால் உடனே அவர்களை கவிஞரிடம் அனுப்பிவிடுவார்.

கவிஞர் மட்டும் என்ன லேசுப்பட்டவரா? நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவராச்சே! அவரும் அப்படித்தான் தனக்கு வரும் வாய்ப்பை பட்டுக்கோட்டையாரிடம் டைவர்ட் செய்து அனுப்பிவிடுவாராம். இப்படி நகமும் சதையுமாக இருந்த நண்பர்கள் மீது யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை, காலன் நுழைந்துவிட்டான்.

ஆம் சிறு வயதிலேயே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் காலமாகிவிட்டார். நண்பனின் மரணம் கவிஞர் கண்ணதாசனை புரட்டி போட்டது. பாடல் எழுத உட்கார்ந்தாலே பட்டுக்கோட்டையாரின் முகம்தான் வந்து செல்கிறது. அந்த நேரம் பார்த்து கவலையில்லா மனிதன் என்ற படத்தை வேறு கண்ணதாசன் தயாரித்து வந்தார். அந்த படம் பாதி முடிந்தது.

அப்போது அந்த படத்தின் சிசுவேஷனுக்கு ஏற்ப ஒரு சோக பாடலை எழுத வேண்டும். ஆனால் கவிஞர் கண்ணதாசனோ பாடல் எழுத வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறார். காரணம் கண்ணதாசன் மனதில் பட்டுக்கோட்டையார் ஆறாத ரணமாகிவிட்டார். "இப்படியே இருந்தால் எப்படி" என அவரை எம்எஸ்வியும் அந்த படத்தின் நாயகன் சந்திரபாபுவும் சமாதானப்படுத்தினார்கள்.

பிறகு இறந்த நண்பனை நினைத்து ஒரு பாடலை எழுதுமாறு கண்ணதாசனை இருவரும் நிர்பந்திக்கிறார்கள். அப்போது அவர் கண்ணீருடன் எழுதியதுதான் பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய் என்ற பாடல். இந்த பாடலை சந்திரபாபுவே பாடியிருந்தார். மிக பெரிய ஹிட்டடித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+