Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சப் ரிஜிஸ்டர் ஆபீசில் யாருங்க இது? குமரி, மதுரையில் பத்திரப்பதிவு செய்ய போனால்? ஓடிவந்த தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. அத்துடன், முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.

பதிவுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு போதுமான பாதுகாப்பும் இல்லாமல் போய் கொண்டிருப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.. காரணம், சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யவேண்டி, சார் - பதிவாளர் அலுவலகங்களை தேடி பொதுமக்கள் செல்ல நேரிடுகிறது..

kanniyakumari madurai tn registration department

எனினும், சில சார் பதிவாளர்கள், தங்களை நாடி வரும் மக்களை தேவையின்றி அலைக்கழிப்பதாக புகார்கள் எழுகின்றன. சில இடங்களில் உடனடியாக பத்திரப்பதிவு செய்ய முடியாத நடைமுறை சிக்கல்களை சார் பதிவாளர்கள் சுட்டிக்காட்டினாலும், பொதுமக்கள் அதனை ஏற்பதில்லையாம். இதனால் பொது மக்களுக்கும், சார் - பதிவாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் வெடித்துவிடுகிறது.

புதிய விதிமுறைகள்: கடந்த வாரம் கன்னியாகுமரி சுண்டவிளையை சேர்ந்த ஜஸ்டஸ் மார்ட்டின் என்பவர் தன்னுடைய 1 சென்ட் நிலத்தை, பதிவு செய்யுமாறு கருங்கல் சார்பதிவாளர் அரிகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகள் அமலின்படி, நிலத்தை நேரடியாக பதிவு செய்ய முடியாது என்பதால், மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து ஆய்வு நடத்தி அறிக்கை தந்த பிறகுதான் பதிவு செய்ய முடியும் என்று சார் பதிவாளர் விளக்கமளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜஸ்டிஸ் சார் பதிவாளர் அரிகிருஷ்ணன் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்கள் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு, கொளுத்த முயன்றார். எனினும், அங்கிருந்தவர்கள் ஜஸ்டிஸ் மார்ட்டினை வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதேபோல, மதுரை பேரையூர் சார் - பதிவாளர் அலுவலகத்திலும், பத்திரத்தை பதிய மறுத்த சார் - பதிவாளரை, ஒரு நபர் தாக்கியதில், அவரது மண்டை இரண்டாக உடைந்தது.

நியாயமற்ற தாக்குதல்: இந்த 2 அடுத்தடுத்த சம்பவங்களால், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு பதிவுத்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்தபடி உள்ளனர். சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு கடமையை செய்தாலும், நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகும் நிலைமை ஏற்படுவதாகவும், பெண்கள் உள்ளிட்ட பதிவு அலுவலர்களுக்கு, பாதுகாப்பற்ற சூழல் பணிகளில் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பணியிடங்களில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோருவதுடன் தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்க துவங்கியிருக்கின்றன. அந்தவகையில், பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் மூன்றரை ஆண்டு கால சாதனை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் காட்டமாக கூறியிருக்கிறார்.

கன்னியாகுமரி:
இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரியை தொடர்ந்து மதுரையிலும் சார் பதிவாளர் மீது தாக்குதல் – பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் மூன்றரை ஆண்டு கால சாதனை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு ஆவணத்தை நிராகரித்ததாக கூறி சார்பதிவாளர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்திலும் பத்திரத்தை பதிவு செய்ய மறுத்ததாக கூறி மற்றொரு சார் பதிவாளர் மீதும் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்திரப்பதிவு:
தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி காவலர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் வரிசையில் தற்போது நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்றும் சார் பதிவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் ஒட்டுமொத்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

சட்ட நெறிமுறைகள்: எனவே, சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசு அதிகாரிகளின் மீது இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+