• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசியிடமிருந்து சிக்கிய லேப்டாப்கள்.. நூற்றுக்கணக்கில் பெண்களின் ஆபாச படம்.. தந்தையின் திடீர் கதறல்!

நாகர்கோயில் காசியிடம் 2வது நாள் விசாரணை நடந்து வருகிறது
Google Oneindia Tamil News

சென்னை: காம கொடூரன் காசியின் கோழிப்பண்ணையில் ஏகப்பட்ட லேப்டாப்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. அவைகளில்தான் மொத்த ஆபாச வீடியோவும் உள்ளதாம்.. காசி ஏமாற்றிய அந்த நடிகரின் மகள் யார் என்பது உட்பட போலீசார் தங்களுடைய 2-வது நாள் விசாரணையை காசியிடம் ஆரம்பித்துள்ளனர்.. இதனிடையே "என் பையனை போட்டு தள்ள பார்க்கிறாங்க.. என்கவுன்டர் பண்ண பார்க்கிறாங்க" என்று காசியின் அப்பா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை தெரிவித்துள்ளார்.

Recommended Video

  nagercoil court kasi crime Archives | கோர்ட் வளாகத்தில் ஹார்ட் சிக்னல்... கொஞ்சம் கூட பதறாத கா

  நாகர்கோயில் காசி விவகாரம் சூடு பிடித்து வருகிறது.. சுகுனா சிக்கன் குமரி மாவட்ட டீலர்தான் காசி.. ஏகப்பட்ட பெண்களை மயக்கி, ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி வந்துள்ளவர்.. பெண்களிடம் பறித்த பணத்தை வைத்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

  பெண் டாக்டர், பெண் என்ஜினியர், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் லிஸ்ட் நீள்கிறது.. ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே காசி இப்படித்தானாம்.. பெண் தோழிகளில் எல்லை மீறி நடந்துள்ளார்!!

  விசாரணை

  விசாரணை

  அவரது லேப்டாப்களில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.. அவைகளின் அடிப்படையில் காசியிடம் 3 நாள் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.. நேற்று முதல் நாள் விசாரணை நடந்தது.. ஆனால் காசி போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்பட்டது.

  பொய் வழக்கு

  பொய் வழக்கு

  இதனிடையே காசியின் அப்பா தங்கபாண்டியன் குமரி மாவட்ட கலெக்டர் ஆபீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "என் மகன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. அவனை என்கவுண்டர் செய்ய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.. இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்" என்று மனு அளித்துள்ளார்.

  மோசடி வழக்கு

  மோசடி வழக்கு

  காசி மீது ஏற்கனவே நிறைய பெண்கள் புகார்களை தந்துள்ளனர்.. இன்னமும் ஆன்லைன் மூலமாக தந்து வருகிறார்கள்.. இதுபோக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார்.. மோசடி வழக்கும் காசி மீது உள்ளது.. அதனால் காசியின் அப்பா தந்துள்ள மனுமீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவில்லை. அதுமட்டுமல்ல.. தாங்கள் வசித்து வரும் வீடு முறையான அனுமதியுடன்தான் கட்டப்பட்டது.. அதை வேண்டுமென்றே ஜப்தி செய்யும் நோக்கில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி உள்ளார்.

  மாதர் சங்கம்

  மாதர் சங்கம்

  அதனால் காசியின் வழக்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கி வருகிறது.. அதேசமயம், இந்த விவகாரத்தில் மாதர் சங்கமும் கொந்தளித்துள்ளது.. "இந்த சம்பவம் பொள்ளாச்சியை விட மிக மோசமானது.. இதில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பெயர் வெளியே வராத அளவுக்கு போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள யாருமே இப்படிப்பட்ட குற்றங்களை செய்யாமலிருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  எதிர்பார்ப்பு

  எதிர்பார்ப்பு

  இன்று காசியிடம் 2வது நாள் விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.. முதல் நாள் விசாரணைக்கே என் பையனை கொல்ல பார்க்கிறார்கள் என்று அவரது அப்பா வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளதால், காசியின் வழக்கு எப்படி போய் முடியுமோ என்ற கவலை எழுந்துள்ளது.. எனினும் நம் போலீசார் குற்றங்கள் நிரூபிக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கையையும், தண்டனையும் காசிக்கு பெற்று தருவார்கள் என்றே நம்பப்படுகிறது!

  English summary
  nagercoil kasi cheating case issue, 2nd day inquiry is going on it
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X