விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்? தமிழக ஆளுநரின் திட்டம் இதுதான்! மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்
சென்னை: யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால், மரபுப்படி அதிக தொகுதிகள் பெற்ற கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்து இருக்க வேண்டும். அதை விடுத்து விஜய்யை பெரும்பான்மையை காட்டுமாறு ஆளுநரால் கூற முடியாது. பெரும்பான்மையை காட்ட வேண்டிய இடம் சட்டமன்றம் தான் என்று உச்ச நீதிமன்றமும் தெளிவாக கூறியிருக்கிறது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.
தவெக தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். இதற்கு இன்னும் பலன் கிடைக்காத அதே சூழலில் ஆளுநர் ஆர்லேகரும் பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டினால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என கூறிவிட்டார். இந்நிலையில் ஆளுநர் இப்படி சொல்ல முடியாது என கபில் சிபல் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

யாருக்கும் பெரும்பான்மை இல்லையென்றால் தனிப்பெரும் கட்சியை அழைக்க வேண்டும். இந்த சூழலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. மரபுகளின் படி தனிப்பெரும் கட்சியையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். சட்டசபையில் தான் பெரும்பான்மையை காட்ட வாய்ப்பளிக்க வேண்டும்.
சட்டசபையில் பல விளைவுகள் ஏற்படலாம். ஒருசிலர் விஜய்யை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்யலாம். வெளிநடப்பு செய்யும் போது கூட அவருக்கு ஆதரவான சூழல் எற்படலாம். கர்நாடகாவில் இப்படியான ஒரு நிலைமை உருவாகியுள்ளது. சட்டப்பேரவையே முடிவு எடுக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். ஆளுநர் நேரத்தை தாமதிக்க நினைக்கிறார்.
அவருக்கு மேலிருப்பவர்கள் தவெக ஆட்சி அமைக்காத சூழலை விரும்புகிறார்கள். தவெக தலைவர் விஜய்யை பெரும்பான்மையை காட்டுமாறு ஆளுநர் கூறியதாக நான் அறிகிறேன். இது ஆளுநர் வேலை இல்லை. உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. பெரும்பான்மையை காட்ட வேண்டிய இடம் சட்டமன்றம் தான் என்று. நீதிமன்றங்களுக்கு போனால் இந்த நேரம் இன்னும் காலதமாதம் ஏற்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications