நோ எக்ஸாம்.. காரைக்குடியில் அரசு வேலை.. மாதஊதியம் ரூ.42,000.. அழைக்கும் சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐ!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் மற்றும் சிஇசிஆர்ஐ செயல்பட்டு வருகிறது.
சென்னை: எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.42,000 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - சிஇசிஆர்ஐயில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் டிகிரி, என்ஜினியரீங் முடித்த அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CSIR(இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனம்) - CECRI (மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்) அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆள்தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
காரைக்குடியில் உள்ள CSIR-CECRIல் சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், ப்ராஜெக்ட் அசோசியேட் - I, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் என்ற 3 பிரிவுகளில் காலியாக உள்ள 16 பணியிடங்கள் உள்ளன. இதில் சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு 2 பேர், ப்ராஜெக்ட் அசோசியேட் - I பணிக்கு 11 பேர், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் பணியை பெற விரும்புபவர்கள் வேதியியலில் பிஎச்சடி அல்லது Metallurigical Engineer/Metallurigical and Materials Science Engineering பிரிவில் பிஎச்டி முடித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட் -I பணியை பெற விரும்புபவர்கள் வேதியியல் , இயற்பியல், நானோ சயின்ஸ், நானோ டெக்னாலஜி பிரிவில் எம்எஸ்சி படிப்பு இல்லாவிட்டால் பி.டெக்கில் கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு பிஎஸ்சி பிரிவில் இயற்பியல், வேதியியல், நானோ சயின்ஸ், நானோ டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு - மாத ஊதியம் எவ்வளவு?
சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட் - I பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.42 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் அசோசியேட் - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.25 ஆயிரம், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் மாத சம்பளமாக வழங்க வேண்டும்.

எழுத்து தேர்வு கிடையாது
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு கிடையாது. நேர்க்காணல் முறையில் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தற்காலிக பணியாகும். சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு மார்ச் 3ம் தேதி காலை 9.30 மணிக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது. சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு மார்ச் 7 ம் தேதி காலை 9.30 மணிக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது. நேர்க்காணல் என்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CSIR - CECRI,,COLLEGE,ROAD, KARAIKUDIல் நடைபெற உள்ளது.

சந்தேகங்களை தீர்க்க..
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கு உரிய முறையில் பூர்த்தி செய்து கல்வித் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 04565-241219/218 என்ற எண்களை அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] எனும் மெயில் மூலம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை காண Click Here
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications