ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அண்ணன் மாதிரி நினைச்சேன்! கடைசியில் அவர் புத்தி.. பெண் பரபரப்பு புகார்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலியல் தொல்லை புகார் அளித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த காயத்ரி தேவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், வாட்ஸ் அப் காலில் அழைத்து தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் திருமணம் செய்துகொள்வதாக கூறி தகாத முறையில் பேசியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ரவீந்திரநாத்தின் மனைவியிடம் தாம் முறையிட்டதாகவும் மேலும், தன்னிடம் அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்காக ரவீந்திரநாத் மன்னிப்பு கேட்காவிட்டால் ஊடகங்களில் நடந்ததை கூறுவேன் எனக் கூறியதால் தமக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளதாகவும் காயத்ரி தேவி தெரிவித்தார்.
குடும்ப நண்பர்களாக கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக தாம் ரவீந்திரநாத் குடும்பத்துடன் பழகி வந்ததாகவும் சொந்த அண்ணனை போல் ரவீந்திரநாத்தை நினைத்து வந்ததாகவும் காயத்ரி தேவி தெரிவித்தார். ரவீந்திரநாத் குடும்பத்து பெண்களிடம் இது போல் யாராவது பேசினால் அவர்கள் சும்மா இருப்பார்களா என்றும் சாதாரண வீட்டு பெண்கள் என்றால் அவ்வளவு இலக்காரமா எனவும் காயத்ரி தேவி கேள்வி எழுப்பினார்.
மேலும், ரவீந்திரநாத் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிந்தும் பிள்ளைகளுக்காக அவரது மனைவி பொறுமை காத்து வருவதாக காயத்ரி தேவி கூறினார். வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் வரச் சொன்னதற்கான ஆதாரங்களும், நள்ளிரவை கடந்து வாட்ஸ் அப்பில் தனக்கு அவர் அழைத்து பேசியதற்கான ஆதாரங்களும் உள்ளதாக கூறியிருக்கிறார்.
ரவீந்திரநாத்தின் செயல்பாடு பற்றி அவரது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் தாம் முறையிட்டதாகவும் ஆனால் தமது பேச்சை கேட்கும் நிலையில் மகன் இல்லை எனச் சொல்லிவிட்டார் எனவும் காயத்ரி தேவி கூறினார். மொத்தத்தில் ரவீந்திரநாத் எம்.பி. மீதான பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications