Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொங்கி துண்டான உறுப்புகள்.. மாமியாரை உறுத்திய 20 வயது வித்தியாசம்! பண்ணை வீட்டில் போலீஸ் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, தற்கொலைகளும் பெருகி கொண்டிருக்கின்றன.. மற்றொருபக்கம் கள்ளக்காதல் கொலைகளும் அதிகரித்தவாறு உள்ளன.,. இதற்கு நடுவில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி, பலாத்கார சம்பவங்களும் அதிகரித்து கவலையை தந்து கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்டசூழலில், உருவ கேலி, தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகளால் நடக்கும் வன்முறைகளும் பெருகிவிட்டன.. அப்படியொரு சம்பவம்தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த 7-ந் தேதி காலையில் நாய் ஒன்று, பிளாஸ்டிக் கவருடன் சுற்றி வந்தது.. அந்த கவரில் மனித கை ஒன்று கிடந்ததை கண்டு, அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தந்தனர்.

karnataka Mother in law Farmhouse

பிளாஸ்டிக் கவர்

உடனே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிளாஸ்டிக் கவரில் இருந்த மனித கையை மீட்டனர்.. வெறும் கை மட்டுமே கிடந்ததால், மற்ற உடல் பாகங்களும் இதுபோலவே துண்டாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.. மேலும் அந்த உடல் பாகங்கள் பல்வேறு பகுதியில் வீசப்பட்டிக்கலாம் என்றும் நினைத்து, விசாரணையை கையிலெடுத்தனர்..

அந்த பகுதியில் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. அதனால், சுற்றுவட்டார பகுதியில் தேட துவங்கினர்.. 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபிறகுதான், உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கிடைத்தன.. மொத்தம் 19 இடங்களில் துண்டு துண்டாக கிடந்த பாகங்களை போலீசார் மீட்டனர். ஆனால் தலை மட்டும் கிடைக்கவில்லை.

19 பாகங்கள்

எனினும் கிடைத்த 19 உறுப்புகளை, டெஸ்ட்டுக்காக லேப்புக்கு அனுப்பி வைத்தனர்.. இறுதியில் கொலை செய்யப்பட்டது ஒரு பெண் என்பது ரிப்போர்ட்டில் தெரியவந்தது.

உடனே போலீசார், துமகூரு மாவட்டத்தில், காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.. அப்போது கடந்த 3-ந்தேதி பெல்லாவியை சேர்ந்த 42 வயதான லட்சுமி தேவி என்ற பெண் மாயமாகிவிட்டது தெரியவந்தது. உடனே லட்சுமி தேவியின் முகவரியை தேடிப்பிடித்து சென்ற போலீசார், அவரது கணவர் பசவராஜ் என்பவரிடம் விசாரித்தனர்.

தேஜஸ்வி மாயம்

கடந்த 3-ந் தேதி ஹனுமந்தபுராவில் உள்ள தன்னுடைய மகள் தேஜஸ்வியின் வீட்டிற்கு சென்றபோது, மனைவி காணாமல் போனதாகவும், அதற்குபிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை என்றும் பசவராஜ் சொன்னார்.. இதனால் போலீசார், உண்மையிலேயே கொலை செய்யப்பட்டது லட்சுமி தேவிதானா? என்று குழப்பமடைந்தனர்.

இந்த சூழலில்தான், கொலையுண்ட பெண்ணின் தலையும் கிடைத்தது.. உடனே பசவராஜும் கொலை செய்யப்பட்டது லட்சுமிதேவிதான் என்று அடையாளம் காட்டினார்

சிசிடிவி கேமரா

இதையடுத்து போலீசார் லட்சுமி தேவியை கொன்றது யார்? ஏன் கொன்றார்கள்? எங்கே மாயமானார்? என்பது தெரியாமல் போலீசார் திணறினார்கள்.. இதற்காகவே தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.. அங்கிருந்த சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கடந்த 3ந்தேதி மாலை துமகூரு அனுமந்தபுராவில் இருந்து வெள்ளை கலரில் காஸ்ட்லி கார் செல்வது பதிவாகியிருந்தது.. அந்த காரின் முன்பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும், பின்பக்கத்தில் மற்றொரு பதிவெண்ணும் இருந்தது போலீசாரின் கண்ணில் பட்டது.. இதுதான் போலீசாருக்கு கிடைத்த முக்கிய க்ளுவாகும். எனவே, அந்த காரின் உண்மையான நம்பரை கண்டுபிடித்தனர்.

வெள்ளை கலர் காஸ்ட்லி கார்

அந்த வெள்ளை கார், உர்டிகெரே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.. ஆனால் போலீசார் சதீஷிடம் உடனே விசாரணையை நடத்தாமல், அவரது செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தனர்.. அப்போது லட்சுமிதேவி காணாமல் போனதிலிருந்தே அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்ததுமே போலீசார் அலர்ட் ஆனார்கள்.

இதற்கு பிறகே சதீஷ் மற்றும் அவரது நண்பர் கிரண் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தங்கள் பாணியிலான விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில் அந்த பயங்கர உண்மையை போலீசாரிடம் போட்டு உடைத்தார் சதீஷ்..

அதாவது, லட்சுமி தேவியின் மருமகன் ராமச்சந்திரய்யா என்பவர்தான், தன்னுடைய மாமியாரை கொலை செய்ய சொன்னாராம்.. மருமகன் ராமசந்திரய்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, அந்த மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.. லட்சுமி தேவியின் மகள் தேஜஸ்வியை, 2வதாக திருமணம் செய்துள்ளார்..

20 வயது வித்தியாசம்

இதில் மருமகனுக்கு 40 வயதாகிறதாம்.. மகளுக்கு 20 வயதாகிறதாம்.. இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருப்பதை, அடிக்கடி சொல்லி குத்திக்காட்டி வந்தாராம் மாமியார் லட்சுமி தேவி.. இதுதான் மருமகனுக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. அதனால் மாமியாரை கொலை செய்ய முடிவு செய்து, சதீஷ், கிரண் இருவருக்கும் ரூ.4 லட்சம் பேரம் பேசி, 50000 அட்வான்சும் தந்துள்ளார்..

அதுமட்டுமல்ல, கொலை செய்ததுமே, சடலத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு காஸ்ட்லி காரை வாங்கி, அதை சதீஷ் பெயரில் ரிஜிஸ்தர் செய்து தந்துள்ளார்.. சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த மாமியாரை வழியிலேயே மடக்கி கடத்தி, ஓடும் காரிலேயே கழுத்தையும் நெரித்து கொன்றுள்ளனர்..

பண்ணை வீட்டில் பயங்கரம்

பிறகு சடலத்தை தன்னுடைய பண்ணை வீட்டுக்கு தூக்கி சென்ற சதீஷ், கூர்மையான ஆயுதங்களை வைத்து, மாமியாரின் உடலை 19 துண்டுகளாக வெட்டிவிட்டாராம்.. உடலின் துண்டுகளை ஒவ்வொரு பகுதியில் வீசிவிட்டால், கொலையை கண்டுபிடிக்க முடியாது என்றும் நினைத்தார்களாம்.. இவ்வளவு விவரங்களையும் போலீசில் வாக்குமூலமாக தெரிவித்ததையடுத்து, மருமகன் உட்பட 3 பேரும் தற்போது கைதாகி உள்ளனர்..

ஒரேயொரு கை மட்டும் வைத்து, வெவ்வேறு பகுதியில் வீசப்பட்டிருந்த மற்ற 18 உடலின் பாகங்களை சேகரித்து, போலி எண்ணை வைத்து கொலையாளிகளை கண்டுபிடித்த போலீசாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன..

இதில் மாமியாரை கொன்ற மருமகன், அந்த பகுதியிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒரு பல் டாக்டராம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+