"மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை!".. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூர்: "மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை" என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கர்நாடக அரசின் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அமல்படுத்த அனுமதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாநில அரசு கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக கர்நாடக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில் தொழில்துறை அமைச்சராக சந்தோஷ் லாட் உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகாவில் நீண்டகாலமாக அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை கர்நாடகா அரசு பரிசீலனை செய்தது.
இதையடுத்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதம் ஒருமுறை என்று மொத்தம் 12 நாட்கள் அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை கர்நாடகா அரசு ஏற்றது. இதையடுத்து பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.
மாதவிடாய் விடுப்பு தொடர்பாக பெங்களூர் ஹோட்டல்கள் சங்கம் மற்றும் Avirata AFL கனெக்ட்டிவிட்டி சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி கர்நாடகா அரசின் மாதவிடாய் விடுப்பு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் "மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை" என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கர்நாடக அரசின் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அமல்படுத்த அனுமதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாதவிடாய் விடுப்பு (ML) தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டம் இயற்றப்படும் வரை, பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் 18 முதல் 52 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் மாதத்திற்கு ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கொள்கையை 'கண்டிப்பாகவும் உண்மையாகவும்' செயல்படுத்த வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
கர்நாடக அரசு மாதவிடாய் விடுமுறை திட்டத்தை அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மாதவிடாய் விடுப்பு கொள்கை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாதத்துக்கு ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் மாணவிகள் மாதவிடாய் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications