ஒரே ஒரு முஸ்லிம் மாணவி.. சுற்றிலும் "காவி".. கிறிஸ்தவத்தையும் விடாத பாஜக.. வரிந்து கட்டிவந்த ஜோதிமணி
பாஜக மீது எம்பி ஜோதிமணி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
சென்னை: "பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் தேச விரோத சக்திகள்.. அவர்களுக்கு எதிராக நிற்பதுதான் தேசப்பற்று" என்று எம்பி ஜோதிமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பூதாகரமாக மாறிவருகிறது... மாணவிகளுக்கு எதிராக மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வருவதுமாக பிரச்சனைகள் பெரிதாகி விட்டது..
இது குறித்து எம்பி ஜோதிமணி தன்னுடைய கருத்துக்களை அழுத்தமாகவும், ஆழமாகவும் செய்தியாளர்களிடம் பதிவு செய்துள்ளார்.

பிரச்சனை
"ஒரு மாணவருக்கு ஒரு பிரச்சனை என்றால் மொத்த மாணவ சமுதாயமும் இணைந்து நிற்பார்கள்... ஒரு பிரச்சனைக்கு மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி இருப்பதை நாம் இதற்கு முன்பு பார்த்திருப்போம்... ஆனால் இப்போது கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வருத்தமளிக்கிறது.

ஜெய் ஸ்ரீராம்
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவரை ஏராளமான மாணவர்கள் காவி துண்டு அணிந்து கொண்டு ஒன்றுகூடிச் சூழ்ந்து கோஷம் எழுப்பியது தவறானது... ஒரு பெண்ணை சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புகின்றனர்.. அதை எதிர்த்து அந்த பெண் நிற்கிறாள். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு எதிராக காவித்துண்டு அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவர்கள் அல்லாத பலபேர் மாணவியை விரட்டும் காட்சியை நாம் பார்த்தோம்...

முஸ்லிம் மாணவி
இந்த காட்சி, இந்தியா முழுவதும் தீப்பிடித்ததுபோல பரவியுள்ளது. இது தமிழகத்துக்கு வந்துவிட ரொம்ப நாள் ஆகிவிடாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மட்டுமே இந்த பிரச்சனைக்கு முழுக்க முழுக்க காரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் இப்படியெல்லாம் வன்முறை ஏற்படுகிறது. முஸ்லிம் மாணவி சூழ்ந்து எதிராக கோஷங்கள் எழுப்பி கலாட்டாவில் ஈடுபட்டவர்களில் 90% மாணவர்கள் கிடையாது.. அவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள்... பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என்று அவர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்...

பாஜக
எனவே, எல்லாரும் சேர்ந்து ஆர்எஸ்எஸ், பாஜகவை நேரடியாகவே எதிர்க்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக நிற்பது மட்டும் தான் தேசப்பற்று.. அப்போதுதான் தமிழகத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை காக்க முடியும். முஸ்லிம் மாணவியை ஒன்று சேர்ந்து ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியவர்கள் இந்துக்கள் கிடையாது.. அவர்கள் இந்துத்துவாவாதிகள்.. இந்தியா மதச்சார்பற்ற நாடு.. பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க நாடாகும்.

கிறிஸ்தவ மதம்
கடந்த 70 வருடங்களாக பாதுகாப்பு உடைய நாடாக இந்தியாவைக் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.. இந்தியாவில் இருக்கக்கூடிய 80 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரிகள் கிறிஸ்தவ மதத்தினரால் நடத்தப்படுகிறது... அந்த கல்வி நிறுவனத்துக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகக் கர்நாடகா உருவாகி வருகிறது" என்று ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார்.
-
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications