Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தையின்மை சிகிச்சை மையங்கள் தொடங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் குழந்தையின்மை சிகிச்சைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

கருத்தரிப்பு மையங்கள்

கருத்தரிப்பு மையங்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையங்கள் இல்லாதது குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 155 கருத்தரிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன (22 ஏப்ரல் 2021 நிலவரப்படி), ஒரு அரசு மருத்துவமனையில் கூட கருவுறுதல் மையங்கள் இல்லை என்று ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

ரூ.3 லட்சம் வரை கட்டணம்

ரூ.3 லட்சம் வரை கட்டணம்

சிகிச்சை முறைகள், உபகரணங்கள், சிகிச்சையின் எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து, தனியார் சுகாதார நிலையங்களில் IVF அல்லது பிற கருவுறுதல் சிகிச்சைகளுக்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கட்டணமாக இருக்கிறது. கருவுறுதல் சிகிச்சையின் அதிகப்படியான செலவு, கருவுறாமையுடன் போராடும் தம்பதிகள் அனுபவிக்கும் உளவியல் துயரத்தை அதிகரிக்கக் கூடும்.

முக்கிய கவலை

முக்கிய கவலை

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 படி மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) அல்லது பெண்களுக்கான சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 2019-21 ல் தமிழ்நாட்டில் 1.8 ஆக உள்ளது. கருவுறாமை என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநிலத்தின் முக்கிய கவலையாக இருக்கக் கூடும். தமிழகத்தை பொறுத்தவரை 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன.

சிகிச்சை வசதி

சிகிச்சை வசதி

மேலும் இந்த மருத்துவமனைகள் இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF), ப்ரீ-இம்ப்லாண்டேஷன் ஜெனடிக் டயக்னாஸிஸ் (Pre-implantation Genetic Diagnosis), சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன் (ICSI), லேசர் அசிஸ்டெட் ஹட்ச்சிங் (LAH), மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதற்கான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, டைம் லேப்ஸ் IVF இன்குபேட்டர், ஃபைப்ராய்டு கிளினிக்குகள் மற்றும் முட்டை, கரு மற்றும் விந்தணு வங்கிகள் போன்ற கருவுறாமை பராமரிப்பு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு பாராட்டு

அரசுக்கு பாராட்டு

எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையிலும், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் கருத்தரிப்பு கிளினிக்குகளை அமைப்பதற்கு மாநில அரசு முனைப்பு காட்டுவது பாராட்டத்தக்கது என்றாலும், மாநிலம் முழுவதும் உள்ள மற்ற பெரிய அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகளை உடனடியாகத் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+