முகத்தை ஏறெடுத்து கூட பார்க்காத ராகுல்காந்தி.. கூலாக கார்த்தி சிதம்பரம் செய்யும் வேலையை பாருங்க
சென்னை: நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி, தன்னை கண்டு கொள்ளாமல் சென்றதாக வீடியோ பரவிய நிலையில் கார்த்தி சிதம்பரமோ தனது ட்விட்டரில் வேர்டுள் விளையாடியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும் அவரை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்தனர். தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம், அமைதி வழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் டெல்லியில் காந்தி நினைவிடம் இருக்கும் ராஜ்காட் பகுதியிலும் போராட்டம் நடந்தது. ஆனால் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரமோ அது போன்ற போராட்டங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. அவரது செயலை பலரும் விமர்சித்தனர்.

ட்விட்டரில் ஆக்டிவ்
மேலும் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருந்து வரும் கார்த்தி சிதம்பரம், ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் குறித்து பெரிதாக எந்த கருத்தையும் போடவில்லை. போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. இன்னும் சொல்ல போனால் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ஒன்றுமில்லாமல் ஆக்க செயல்பட்டு கொண்டிருந்த போது அவர் டிவிட்டரில் வேர்டுளி விளையாட்டு விளையாடி கொண்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சி
அது போல் காங்கிரஸ் கட்சியில் தீவிர பிரச்சினைகள் நடக்கும் போதெல்லாம் கார்த்தி சிதம்பரம் பல்வேறு சீரியல்கள் குறித்தும் போஸ்ட் செய்து வந்தார். இந்த வேர்டுளி விளையாடியது குறித்து விமர்சனங்கள் எழுந்த போதும் கார்த்தி சிதம்பரம் நான் வேர்டுளி விளையாடியது பெரிய சர்ச்சையாகியுள்ளது. இது பெரிய விவகாரம் ஆகும் என யார் நினைத்திருப்பார். நான் இப்படி நடக்கும் என நினைக்கவில்லை. நீங்களும் விளையாடி பாருங்கள், அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என போஸ்ட் போட்டிருந்தார்.

விளக்கம்
இந்த விளக்கமும் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரங்கள் ராகுலின் காதுகளுக்கும் சென்றடைந்திருக்கும் என தெரிகிறது. அதன் வெளிபாடை நேற்று நாடாளுமன்றத்தில் பார்த்தோம். ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வந்த போது, அவருக்காக காத்திருந்த எல்லோருக்கும் அவர் கை கொடுத்தார். ராகுல் படியேறியபோது கார்த்தி சிதம்பரம் ராகுலுக்கு எதிராக சிரித்தபடியே நின்றார்.

கை கொடுக்காத ராகுல்
உடனே கார்த்தி கை கொடுத்த போது ராகுல் கை கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் கார்த்தி சிதம்பரத்தின் முகமே மாறிவிட்டது. இந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் ஏதாவது விளக்கம் அளித்திருப்பார் என எதிர்பார்த்து அவருடைய டவிட்டர் பேஜில் நேற்றெல்லாம் காத்திருந்தனர்.

கூலான கார்த்தி
ஆனால் அவர் ராகுல் வீடியோ குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. மாறாக இன்றைய தினம் அதே வேர்டுளி கேமை போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், ராகுல் காந்தி உங்களை கண்டு கொள்ளாமல் போனது குறித்து எந்த வருத்தமும் இல்லாமல் இப்படி விளையாடுகிறீர்களே என்கிறார்கள். இன்னும் சிலர் ராகுல் காந்தி அசிங்கப்படுத்தினது குறித்து கவலைபடாமல் கூலா இருக்காராமா? என கலாய்த்து தள்ளுகிறார்கள்.












Click it and Unblock the Notifications