சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை நடிகர் கார்த்திக் சந்தித்து, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

Sasikala karthick ramadoss

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிகள் 14 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளது. சீமான் இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிட உள்ளார். அவர் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், யாரும் எதிர்பாரா விதமாக சசிகலா தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். வட மாவட்ட மற்றும் தென் மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மெஜாரிட்டியாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளை இந்த கூட்டணி நிச்சயம் பிரிக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் சசிகலா தலைமையிலான கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில் ராமதாஸ் தரப்பு கோரிய மாம்பழம் சின்னம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அன்புமணி தரப்புக்கே மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படும் நிலை உள்ளது. இதனால், ராமதாஸ் தரப்பினர் தென்னந்தோப்பு அல்லது தேங்காய் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ராமதாஸ் - சசிகலா கூட்டணி வட மற்றும் தென் மாவட்டங்களில் வாக்குகளை கணிசமாக பிரித்து, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவில் இருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் சசிகலாவை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்திக், சசிகலாவை சந்தித்துள்ளார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கார்த்திக் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா தரப்புக்கு ஆதரவாக கார்த்திக் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்ற கார்த்தில், பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கி, பின்னர் அந்தக் கட்சியைக் கலைத்து மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+