Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாடு ஒரே தேர்தல் இருந்திருந்தால்! பத்ம விருதுகளை எப்படி தேர்வு செய்வார்கள்? கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை குறி வைத்தே 13 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்ததாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முறை இருந்திருந்தால், பத்ம விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது மத்திய அரசுக்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.

karthi chidambaram padma awards

ஆனால் இப்போது அது மிகவும் எளிதாகிவிட்டது. எந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறதோ அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் போதும் என விமர்சித்துள்ளார்.

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பிரிவுகள் உள்ளன. கலை, கல்வி, மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சேவை, சமூக பணி போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதில் இந்த ஆண்டுக்கான விருது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் மொத்தம் 131 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 13 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த 131 விருதுகளில் தமிழகத்தில் இருந்து 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழத்தில் இருந்து பத்ம ஸ்ரீ விருதுக்கு 11 பேரும் பத்ம பூஷண் விருதுக்கு 2 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ துறைக்கான பத்ம பூஷண் விருது தமிழகத்தை சேர்ந்த கல்லிப்பட்டி ராமசாமி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சமூக சேவைக்கான பத்ம பூஷண் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த எஸ்கேஎம் மயிலானந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருதாளர்களின் பட்டியல்:

கலைத்துறையில் தமிழகத்தை சேர்ந்த காயத்ரி பாலசுப்பிரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்பிரமணியம் சகோதரிகள் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.

மருத்துவ துறையில் எச்வி ஹண்டேவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த கே ராமசாமிக்கு பத்மஸ்ரீ கிடைக்கிறது.

சிவில் சர்வீஸ் பிரிவில் தமிழகத்தின் கே. விஜய குமாருக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் வீரப்பனை தேடும் குழுவில் இடம்பெற்று புகழ்பெற்றவர்.

மொழி மற்றும் கல்வி பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சிவசங்கரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவில் நீலகிரியை சேர்ந்த மறைந்த கலைஞர் ஆர் கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

கலைப்பிரிவில் திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலத்துக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

கலைப்பிரிவில் சேலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டருக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கிறது.

மருத்துவ பிரிவில் தமிழகத்தின் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

கலைப்பிரிவில் ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விளையாட்டு பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பஜனிவேல் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+