தனியாக நடந்து வந்த கருக்கா வினோத்.. கையில் இருந்த ‘பை’ மிஸ்ஸிங்.. பாக்கெட்டுக்குள் போன பாட்டில்கள்!
சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத், பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முன்பு என்ன செய்தார் என்பது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை ஆளுநர் மாளிகை வாயிலில் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகை நோக்கி நடந்து வந்த கருக்கா வினோத் என்பவர் திடீரென பெட்ரோல் குண்டு வீச முயன்றுள்ளார். அவரை போலீசார் சுற்றி வளைத்த போதும், சர்தார் படேல் சாலையில் அவர் ஒரு பாட்டிலை வீசினார். அது அங்கிருந்தே பேரிகார்டு அருகில் விழுந்தது. அங்கு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்தனர்.

ஆனால், ஆளுநர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற விஷமிகள், பாதுகாவலர்கள் தடுத்ததால், நுழைவாயில் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பித்து ஓடிவிட்டதாக ஆளுநர் மாளிகை முதலில் கூறியிருந்தது. மேலும், பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், குண்டு வெடித்ததில் ஆளுநர் மாளிகை பிரதான வாயிலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை பரபர விளக்கம்: இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோர், இன்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, ஆளுநர் மாளிகை முன்பு என்ன நடந்தது என விளக்கினர்.
கிண்டி ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசிய “நபர்கள்” தப்பிவிட்டதாக ஆளுநர் மாளிகை ட்வீட் செய்திருந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார். கருக்கா வினோத், தேனாம்பேட்டையில் இருந்து சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி தன்னந்தனியாக பாதசாரி போல நடந்து வந்தது சிசிடிவி மூலமாக தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
தனியாக நடந்து வந்த கருக்கா வினோத்: பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத், தேனாம்பேட்டையில் இருந்து நந்தனம் சிக்னல் வழியாக சின்னமலை வந்து அங்கிருந்து ராஜ்பவன் வந்து பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகளையும் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கருக்கா வினோத், தேனாம்பேட்டையில் இருந்து அண்ணா சாலையில் பயணித்து, நந்தனம் சிக்னல் வழியாக சைதாப்பேட்டை வந்து, கலைஞர் வளைவு, சைதை பாலம் கடந்து, சின்னமலை வந்து, அங்கிருந்து ஆளுநர் மாளிகை பகுதிக்கு தனியாக நடந்து வருவது தொடர்பான பல்வேறு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் சேகரித்து தொகுத்து வெளியிட்டுள்ளது காவல்துறை.

பையை தூக்கிப் போட்டுவிட்டு: கடந்த 25ஆம் தேதி அன்று மதியம் 2 மணி அளவில் கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை நோக்கி பாதசாரி போல நடந்து வந்துள்ளார். தேனாம்பேட்டையில் தொடங்கி அவர் ஆளுநர் மாளிகை வரும் வரை அவருடன் வேறு யாரும் வரவோ, பேசவோ இல்லை. சின்னமலை பகுதியை தாண்டி தாலுகா ஆபிஸ் பேருந்து நிலையம் அருகே வரும் போது தனது கையில் வைத்திருந்த பையை தூக்கி எறிந்து விட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை தனது சட்டை பைக்குள் வைத்துக் கொள்கிறார் கருக்கா வினோத்.
சர்தார் படேல் சாலைக்கு வந்த கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை. அவர் ஆளுநர் மாளிகையின் எதிர்ப்புறம் இருந்து பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அவரை கைது செய்ததும் காவல்துறையினர் தான் என்பது காவல்துறை வெளியிட்ட சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி ஆகி உள்ளது.
அவருடன் யாருமே வரவில்லை: இந்த வீடியோவை விளக்கி பேசிய சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், “வினோத் தனியாகத்தான் வந்துள்ளார். அவருடன் யாரும் வரவில்லை. குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லவும் இல்லை, ஆளுநர் மாளிகை ஊழியர்களால் அவர் பிடிக்கப்படவும் இல்லை. சென்னை பெருநகர காவல்துறை காவலர்கள் 5 பேரால் உடனடியாக பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுதான் நடந்த சம்பவம்.
ஆனால், ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் 'பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசியதாகவும், வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாகவும் சொல்லப்பட்டுள்ளது'. அப்படி நடக்கவில்லை. போலீஸார் தரப்பில்தான் முதலில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணை நடந்துள்ளது.
அடுத்தகட்ட விசாரணையில்தான் குற்றவாளியுடன் வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா, அரசியல் தொடர்புள்ளதா என்பதை கூற முடியும். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளுநர் நேரம் கொடுக்கும்பட்சத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் விளக்கமளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications