அம்பாள் என்றைக்கடா பேசினாள்?..பல ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவு பேசிய கருணாநிதியின் பேனா
சென்னை: பகுத்தறிவு பகலவன் என்று தந்தை பெரியாரை சொன்னாலும் தனது பேனாவினால் பகுத்தறிவு கருத்துக்களை எழுதி தமிழர்களின் இதயங்களை வென்றவர் கருணாநிதி. 12 வயதில் தொடங்கிய அவருடைய தமிழ்பற்று, அவருடைய தமிழறிவை வளர்த்தது மட்டுமின்றி, தமிழர்களுக்கும் எளிய தமிழை அறிமுகப்படுத்தியது. அவரது பேனாவில் எழுதிய கருத்துக்கள் இன்றைக்கும் கல்வெட்டில் பதிக்கப்பட்டது போல பலராலும் பேசப்படுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடும் இந்த நாளில் அவர் எழுதிய சில பகுத்தறிவு வசனங்களை பார்க்கலாம்.
கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழகம் தலை நிமிர்ந்தது. கருணாநிதியின் பேனா பல முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனா தான் கருணாநிதி பேனா. டைடல் பார்க் உருவாக்க கையெழுத்து இட்ட பேனா கருணாநிதி பேனா என்று பெருமை பொங்க சொன்னவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்ட உத்தரவிட்ட பேனா தான் கருணாநிதி பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்தது பேனா தான் கருணாநிதி பேனா. தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கலைஞர் மு.கருணாநிதி அதிகாலை எழுந்ததும் கையிலெடுக்கும் பொருட்களில் முதன்மையானது அவரின் பேனா. இளம் வயதில் நடத்திய 'மாணவ நேசன்' இதழ் தொட்டு, 1942-ல் அவர் தொடங்கிய 'முரசொலி' இதழ் எனத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தீராமல் எழுதிக்கொண்டே இருந்தது கலைஞரின் பேனா.
கோட்டான் குயிலுக்கு குரல் கற்றுக் கொடுத்ததாம்...!""சிங்கங்கள் உலவும் காட்டிலே சிறுநரிகள் திரிவதுபோல, எண்ணிக்கையிலே குறைந்த அந்தக் கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது... நிராயுதபாணிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்கிறது. அனாதைகளின் ரத்தத்தை அள்ளிக்குடிக்கிறது... அவர்கள் சிலர்... நாம் பலர்.. அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், நாம் சூரர்கள்! அந்த மூர்க்கர்களின் முண்டங்களை பொடி செய்யுங்கள்... சிங்கத் தமிழர்களே சீறி எழுங்கள் என்று 1950 ஆம் ஆண்டு வெளிவந்த மந்திரிகுமாரி படத்திற்காக கலைஞர் எழுதிய இந்த வசனத்தை எம்ஜிஆர் பேசி நடித்த போது தியேட்டரில் விசில் பறந்தது.
பராசக்தி படத்தில் சிவாஜிக்காக எழுதிய வசனங்கள் இன்றைக்கும் மறக்கமுடியாது. "அம்பாள் என்றைக்கடா பேசினாள் அறிவுகெட்டவனே...என தன் பகுத்தறிவு வசனங்களால் திராவிட சினிமா என்ற வகைமைக்குத் தனித்துவ அடித்தளமிட்டவர் கருணாநிதி. அண்ணன் தங்கை பாச கதை என்ற சாதாரண கதையை தனது திரைக்கதை, வசனத்தால் தீப்பிடிக்க செய்தவர் மு.கருணாநிதி. பிச்சையெடுப்பது விதி என்று கடந்து போன சினிமாவில், அவர்களுக்கும் கௌரவம் உண்டு என படம் சொன்னது.
திருமணத்துக்கு எதுக்கு நல்ல நேரமும், சத்திரமும்? இரண்டு மாலையும், ஒரு சொற்பொழிவாளரும் போதும் என்று சுயமரியாதை திருமணத்தை வலியுறுத்தியது என்று திராவிட அரசியலை அழுத்தமாக திரையில் பேசியது பராசக்தி. "ஏய்..., பூசாரி.., முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக்கொள்" என்று பராசக்தியில் பூசாரியை வெட்டப்பாய்ந்த இளைஞனின் குரலாய் கருணாநிதியின் பேனாவிலிருந்து வீசிய பகுத்தறிவுப் புயல் தமிழர்களின் சிந்தனைப் பாதையை திசை திருப்பியது.
கோவிலில் குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல... கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக! பூசாரியை தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. அவன் பக்தி பகல் வேஷமாகிவிட்டதை கண்டிப்பதற்காக!" என்று கருணாநிதியின் வசனத்தை நீதிமன்றத்தில் சிவாஜி பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. தமிழ் திரைவராலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் மறக்க முடியாத படமாக பராசக்தி திகழ்கிறது.
அதே கருணாநிதியின் பேனாதான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராக எழுதியது. தமிழக அரசியலில் கருணாநிதியைப் போல தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளான தலைவர் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால், அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தன்னை தாக்கியவர்களையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழர்களின் அரணாகவே இருந்திருக்கிறார் கருணாநிதி. ஆட்சியில் இல்லாவிட்டால் பேனா மூலம் அறிக்கை அரசியல் நடத்துவார். தினமும் அவரது அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகும். கருணாநிதி மறைந்த போது அவருடன் இணைந்தே மண்ணிற்குள் புதைக்கப்பட்டது. கருணாநிதி மறைந்தாலும் அவரது பேனாவில் எழுதிய பகுத்தறிவு கருத்துக்கள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
-
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
திமுக VS அதிமுக.. சென்னையில் 11 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம்












Click it and Unblock the Notifications