'கலைஞர்'காரில் பயணிக்கும் போது பனங்கற்கண்டு சாப்பிடுவார்! 15 ஆண்டுகால ஓட்டுநர் பகிரும் ருசிகர தகவல்!
சென்னை: கருணாநிதியின் நினைவுநாளான இன்று அவரிடம் 15 ஆண்டுகாலம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கோபி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் கூட்டம் தான் கருணாநிதிக்கு எனர்ஜி எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கோபி பகிர்ந்த தகவல் வருமாறு;

15 ஆண்டுகால ஓட்டுநர்
''கலைஞர் ஐயா இப்போது இல்லையென்றாலும் கூட நான் தினமும் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று காரை தினமும் ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஓடவிட்டு வருகிறேன். வெளியூர்களில் இருந்து கோபாலபுரம் இல்லத்தை காண வருபவர்கள் பலரும் கலைஞரின் கார் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். 4 ஆண்டுகளாக பெரிதாக எந்த வேலையும் எனக்கில்லை என்றாலும் கூட மாத மாதம் சம்பளம் கொடுத்து முதலமைச்சர் ஐயாவும், செல்வி அக்காவும் என்னை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.''

கலைஞருக்கு எனர்ஜி
''டிரைவர் தானே என்று கலைஞர் ஐயா என்னை ஒதுக்கமாட்டார், வெளியூர் பயணங்களின் போதும் தேர்தல் நேரத்திலும் மக்கள் என்ன பேசுறாங்க எனக் கேட்பார். விமானப் பயணத்தை முடிந்தவரை தவிர்த்துவிட்டு காரில் சாலை மார்க்கமாக செல்வது தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். தன்னை சந்திக்க காத்திருக்கும் மக்கள் கூட்டம் தான் கலைஞர் ஐயாவுக்கு எனர்ஜி. மக்களையும் கட்சிக்காரர்களையும் பார்த்தவுடன் ஐயா மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.''

பனங்கற்கண்டு
''அதேபோல் மில்க் பிஸ்கட்ஸ், விக்ஸ், பனங்கற்கண்டு, உள்ளிட்ட ஸ்நாக்ஸ்களை வெளியூர் டூரின் போது சாப்பிடுவார். வீட்டில் இருந்தே வெந்நீர், காஃபி உள்ளிட்ட பானங்களை தயாளு அம்மாள் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். தன்னுடன் இருக்கும் நிர்வாகிகளுடன் ரொம்ப ஜாலியாக பேசிக்கொண்டே பயணிப்பார். மாவட்டச் செயலாளர்களை மாவட்ட எல்லைகளில் காரில் ஏற்றிக்கொண்டாலும் அவர்களுக்கு அந்த மாவட்டத்தில் தெரியாத ரூட்களை, சாலைகளை இவர் சொல்வார்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

டொயோட்டா கார்
டொயோட்டா நிறுவனத்தின் அல்பர்ட் ரக காரை கருணாநிதி பயன்படுத்தி வந்தார். சஞ்சீவி, கோபி என இரண்டு ஓட்டுநர்கள் கருணாநிதிக்கு சுழற்சி முறையில் ஓட்டுநர்களாக பணியாற்றினார்கள். TN 07 BD 2728 என்பது தான் கருணாநிதி பயன்படுத்தி வந்த வாகன பதிவு எண்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications