கருணாநிதி 100 உயர்சிறப்பு மருத்துவமனை! 133 டாக்டர்கள் 1000 படுக்கைகள்! தனியாரை மிஞ்சும் பிரம்மாண்டம்
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கும் நிலையில் அதன் கட்டுமான பிரம்மாண்டம் பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கே போட்டியாக உள்ளது.
குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினே தனது கரங்களால் இம்மருத்துவமனையை திறந்து வைத்து வரலாற்றில் இடம்பெறுகிறார்.

அந்தளவுக்கு இந்த உயர் சிறப்பு மருத்துவமனையில் பார்த்து பார்த்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது தமிழக அரசு. கருவறை முதல் கல்லறை வரை மனிதன் மருத்துவத்தின் தயவின்றி வாழமுடியாத சூழல் நிலவுகிறது.
சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உயர் சிறப்பு மருத்துவமனையில், இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை, நரம்பியல், ரத்த நாளங்கள், குறிப்பாக புற்று நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. 133 மருத்துவர்களுடன் 752 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையானது அப்போலோ, காவேரி போன்ற தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் அளவுக்கும் தரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரத்தை எப்போதும் மெயிண்டெயின் செய்ய வேண்டிய பொறுப்பு அங்கு பணியாற்றக் கூடிய மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் உள்ளது. தனது ஆட்சிக்காலத்தில் உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கென பிரத்யேக முறையில் மருத்துவமனையை கட்டி வரலாற்றில் தனி முத்திரை பதித்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது போன்ற உயர் சிறப்பு மருத்துவமனைகளை சென்னை மட்டுமின்றி திருச்சி, நெல்லை, சேலம், கோவை, வேலூர், உள்ளிட்ட ஊர்களிலும் கட்ட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. அடிக்கல் நாட்டப்பட்ட 15 மாதங்களில் இம்மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications