''கலைஞரின் நாவும் -பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள்''! 9ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற்ற கருணாநிதி!
சென்னை: 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அவர் தமிழுக்காக ஆற்றிய தொண்டுகள் பற்றியும் இடம்பெற்றுள்ளன.
செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில் 9ஆம் வகுப்பு தமிழ்பாடத்தில் இடம்பெற்றுள்ள கருணாநிதி குறித்த விவரம் வருமாறு..
''கலைஞரின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள். இயல் எழுதி இசை எழுதி, நாடகம் எழுதி. முத்தமிழுக்கும் தம் பங்கினை முழுமையாக அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி. இரண்டு வட்சம் பக்கங்களுக்கும் அதிகமான எழுத்து கலைஞருடையது.

அன்பென்ற மை ஊற்றி அருந்தமிழ்க் கடிதங்கள் எழுதியவர் கலைஞர் எதிர்வரும் எந்தக் கேள்விக்கும் சளைக்காது வந்து விழும் சுவையான பதில்களாலும் கேட்போரைக் கட்டிப்போடும் அருவிப்பேச்சாலும் தமிழர் மனங்களைக் கொள்ளை கொண்டவர்.
முத்தாரம், முரசொலி, வெள்ளிவீதி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்: "பொறுத்தது போதும்! பொங்கி எழுட் என்பன போன்ற தீந்தமிழ் வசனங்களால் திரை உலகிற்குத் திசைகாட்டியவர்; பேரறிஞர் அண்ணா இறந்தபோது,
உன் கண்ணொளியின் சுதகதப்பிலே வளர்ந்தொமே:
எம் கண்னெல்லாம் குளமாக என் மாற்றிவிட்டாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்.
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
என்ற வரிகளால் கேட்போரை இதயமுருகச் செய்தவரும் அவர்தான்! கரும்பினும் இனிய கவிதைகள் பற்பல படைத்தவரும் அவர்தான்!
தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம், திருக்குறள் உரை, சிலப்பதிகார நாடகம், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் என 178க்கும் மேற்பட்ட படைப்புகளைச் செந்தமிழுக்குச் சுவையாய் ஆக்கித் தந்திருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க வழிகாட்டியுள்ளார்.
தொல்காப்பியம், பதினெண்மேல்கணக்கு பதினெண்கீழ்க்கணக்கு, இரட்டைக்காப்பியம், முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகிய 41 செவ்வியல் இலக்கியங்களை ஆய்வு செய்தல், மொழிபெயர்த்தல், பதிப்பித்தல் போன்ற பணிகளை வரையறுத்து செம்மொழி உயராய்வு மையத்திற்கு உயிரூட்டினார்.
2010இல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, இமயக் கொடுமுடி முதல் குமரித் தாய்மடி வரை செம்மொழியான தமிழ்மொழியாம் எனச் செம்மாந்து ஒலிக்கச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.'' மேற்கண்ட பகுதிகள் பாடமாக இடம்பெற்றுள்ளன.
இதில் அரசியல் குறித்த எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை என்பதும் முழுக்க முழுக்க தமிழுக்காக ஆற்றிய பணிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?











Click it and Unblock the Notifications