கருணாநிதி என் ரோல் மாடல்.. கரூர் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பு.. ஆங்கில ஊடகத்திடம் மனம் திறந்த விஜய்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறிய தவெக அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கியுள்ளது. தவெக விஜய் நேற்று ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ரோல் மாடல் என்றும் விஜய் குறிப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று பிரபல ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யார் ரோல் மாடல்
அப்போது அந்த ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய், "அரசியலில் வர வேண்டும் என்று நீண்ட காலமாகவே திட்டமிட்டு வந்தேன். இது திடீர் முடிவு இல்லை. அரசியலில் எனக்கு எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தான் எனக்கு ரோல் மாடல். 33 வருட திரை வாழ்க்கையை விட்டு வருவது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் கிங் மேக்கராக இல்லாமல், கிங்காக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
கரூர் சம்பவம் எதிர்பாராத நிகழ்வு. அந்த துயர நிகழ்வு இன்று வரை மிகவும் பாதித்து வருகிறது. நடந்ததை புரிந்து கொள்ள அதிக நேரம் தேவைப்பட்டது. நான் உடனடியாக பதில் அளிக்கவில்லை என்பதற்காக பேசவில்லை என்று அர்த்தம் இல்லை. எனக்கு ஜனநாயகன் படத்திற்கு பிரச்சனைகள், தடைகள் வரும் என்பது ஏற்கனவே அறிந்ததுதான். இதனால் படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
சினிமாவை விட்டாச்சு
அரசியலில் இறங்கினால் திரை வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை நன்கறிவேன். இதற்கான முன்னதாகவே மனதளவில் திடப்படுத்தி கொண்டேன். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதில் என்ற குழப்பம் இல்லை. முடிவு எடுத்து சினிமாவை விட்டு வந்துவிட்டேன். அரசியல் தான் என் எதிர்காலம். தேர்தலில் வெற்றி பெறும் எண்ணத்துடன் அரசியலுக்கு வந்துள்ளேன். என் ரசிகர்கள் அரசியல் களப்பணியாளர்களாக மாறுவார்கள்.
என் தந்தை இயக்குநர். அவர் மூலம் உலகை அருகில் இருந்து பார்த்துள்ளேன். என்னுடைய அரசியல் நீண்ட காலமாக தொடரும்' என்றார். விஜய் வலது சாரியா.. இடது சாரியா.. அல்லது மத்திய பாதையா என்று எழுப்பிய கேள்விக்கு, "இடது வலது என்பதை கடந்து மக்களின் பிரச்சனைகள் தான் முக்கியம். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க முயற்சி செய்வதே என் அரசியல்" என்று பதில் அளித்தார்.
-
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள்












Click it and Unblock the Notifications