மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம்.. இன்று பரிசீலிக்கிறது மத்திய சுற்றுச்சூழல் குழு!!
சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 134 அடியில் பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இன்று பரிசீலனை மேற்கொள்கிறது.

மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.23 ஏக்கர் அளவில் கருணாநிதியின் நினைவிடம் தயாராகி வருகிறது. இந்த நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை, இலக்கிய சிந்தனைகளை நினைக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைய இருக்கிறது. அதேபோல கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் அவருடைய நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஏற்கெனவே மாவட்ட, மாநில அளவில் முன்மொழிவு பெறப்பட்டு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசின் சுற்றுச்சுழல் துறை அமைச்சகத்திடம் அனுமதிகோரி தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த விவகாரம் குறித்து இன்று மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குடு பரிசீலனை மேற்கொள்கிறது. இந்த பரிசீலனைக்கு பின்னரே மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்.


Click it and Unblock the Notifications
