ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு!
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பரிந்துரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். முதல்வராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக இரு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது ஒன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேசியது மற்றொரு மணிகண்டன் குறித்து கருணாஸ் எம்எல்ஏ புகார் மனு.

அக்ஷயா கேபிள்
அரசு கேபிள் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை விமர்சித்து மணிகண்டன் பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் அக்ஷயா கேபிள் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார்.

பகிரங்கம்
அதில் சுமார் 2 லட்சம் இணைப்புகள் உள்ளது என்றும் அந்த கேபிள்களை அரசு கேபிளுடன் அவர் இணைப்பாரா என மணிகண்டன் கேள்வி எழுப்பியிருந்தார். இது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை என அவர் மீது புகார் இருந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், தான் அந்தத் தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

நான்தான் காரணம்
இந்த இரு காரணங்களுக்காகவே மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாடாணை எம்எல்ஏ கருணாஸ் கூறுகையில் அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு நான்தான் காரணம்.

அமைச்சர்
நான்தான் முதலில் அவர் குறித்த புகாரை அளித்தேன். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications