கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி!
சென்னை: பிரபல நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அண்மைக்காலமாக ஆன்மீகம் மற்றும் அரசியல் சார்ந்த மேடைகளில் அதிரடியான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.. அந்த வகையில், தற்போது பொதுக்கூட்டம் ஒன்றில் இந்து மதம் குறித்து அவர் பேசியுள்ள கருத்துக்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கடுமையான கண்டனங்களையும் பெற்று வருகின்றன.. என்ன நடந்தது? கருணாஸ் என்ன பேசினார்?
சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய கருணாஸ், "இந்து என்று ஒரு மதமே கிடையாது" என்று ஆணித்தரமாக வாதிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அப்போது கருணாஸ் பேசியபோது, "வரலாற்று ரீதியாக இந்து என்ற சொல் ஒரு மதத்தைக் குறிப்பது அல்ல.. அது பாரசீகர்களால் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு புவியியல் அடையாளம் மட்டுமே..
கருணாஸ் சர்ச்சை பேச்சு
பண்டைய காலத்தில் இந்த மண்ணில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் எனத் தனித்தனி வழிபாட்டு முறைகளே இருந்தன.. குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்த மக்களை ஒருங்கிணைத்து 'இந்து' என்ற பொதுப் பெயரின் கீழ் கொண்டு வந்தனர்.
ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு எனத் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர்.. அவர்களை வலுக்கட்டாயமாக இந்து அடையாளத்திற்குள் திணிப்பது அவர்களின் உண்மையான அடையாளத்தைச் சிதைக்கும் செயல்..
பாஜக இந்து முன்னணி
நாங்கள் சைவர்கள், நாங்கள் தமிழர்கள், எங்களை இந்துக்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது.. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக போன்ற அமைப்புகள் இந்த அடையாளத்தை முன்வைத்து அரசியல் செய்வது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானது" என்றெல்லாம் கருணாஸ் பேசியிருந்தது பெரும் சர்ச்சைகளை அப்போது கிளப்பியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் மற்றொரு வீடியோவிலும் இதே கருத்தை கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.. அதில் அவர் பேசியிருப்பதாவது:
"நான் சொல்கிறேன், எதையும் சந்திக்க தயாராக சொல்கிறேன். இந்து என்று ஒரு மதமே கிடையாது. பிறகு என்ன இந்து, நான் யார்? நான் சைவ மதத்தை சார்ந்தவன். நான் சிவனையும், முருகனையும் தொன்று தொட்டு ஆண்டு காலமாக வணங்கி வந்தவன். இந்தியாவில் எத்தனையோ மதங்கள் இருக்கிறது. புத்த மதம் இருக்கிறது. சைவம் இருக்கிறது. சமணம் இருக்கிறது. வைணவம் இருக்கிறது. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
இந்து மத ஆதரவாளர்கள்
இஸ்லாம் இருக்கிறது. கிறிஸ்தவம் இருக்கிறது. இப்படி எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது எங்கு இருந்து வந்தது இந்து.
வெள்ளைக்காரர்கள் நமது இந்தியாவை ஆட்சி செய்த போது, அரசு நிர்வாகத்திற்காக பல மொழிகள் பேசக்கூடிய நாடாக இது இருக்கிறது. பல மதங்களை வழிப்படக்கூடிய மக்களாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு மதமாக பிரித்து நிர்வாகம் செய்வதற்காக இஸ்லாமியர்களை ஒரு மதமாகவும், கிறிஸ்தவர்களை ஒரு மதமாகவும், அடுத்த பல மதங்கள் இருந்த நிலையில் நிர்வாகம் செய்வதற்காக வைத்த பொது பெயர் இந்து அவ்வளவுதான், அது மதமே கிடையாது.
கருணாஸுக்கு கண்டனம்
ஆனால் இந்து என்பது வேறு, நான் சிவனை கும்பிடுகிறேன். நீங்கள் பெருமாளை கும்பிடுகிறீர்கள். நீங்களும், நானும் இந்து. வைத்துக்கொள்ளலாம் தப்பு இல்லை. ஆனால் இந்து என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறோம். இத்தனை மதங்கள் சேர்ந்தது இந்து" என்றெல்லாம் பேசியிருக்கிறாராம் கருணாஸ்.. இது பிரபல நாளிதழிலும் வெளியாகி உள்ளது.
இந்து மதத்தை இழிவுபடுத்திய கருணாசுக்கு இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் கருணாஸ் பேசி வருவதாக இந்து முன்னணி மற்றும் பாஜக தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்..
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசியல் லாபத்திற்காக பிரிவினைவாதக் கருத்துக்களை விதைக்கக் கூடாது என்றும் அவருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது..!!












Click it and Unblock the Notifications