அனல் பறக்கும் இடைத் தேர்தல்.. கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அதிரடி பணியிடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜசேகரன் அதிரடியாக இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Karur district police transferred

உள்துறைச் செயலர் இன்று பிறப்பித்த ஒரு உத்தரவில்ல, கரூர் எஸ்.பி. ராஜசேகரன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி. விக்ரமன், அந்த மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமன் 2010ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகும். முன்னதாக நெல்லை, விழுப்புரம், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இதன்பிறகு டிஜிபி அலுவலகத்தில் உள்ள கணிணிமயமாக்கல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.

அரவக்குறிச்சியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். எனவே இந்த தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+