4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை: கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி ஆகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (மார்ச் 15) முதல் அமலுக்கு வந்துள்ள தேர்தல் விதிகளின்படி, முறைகேடுகளை கண்காணிக்க 24 அமலாக்க முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் பணியாளர்களைப் பயன்படுத்தக்கூடாது. பொது மைதானங்கள் மற்றும் ஹெலிபேட்கள் போன்ற வசதிகளை ஆளுங்கட்சி மட்டுமே ஏகபோகமாகப் பயன்படுத்தக்கூடாது. மற்ற கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அரசுப் பணிகளில் தற்காலிக நியமனங்களைச் செய்யக்கூடாது. மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அன்றாடப் பணிகளை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவனிக்கலாம், ஆனால் அது தேர்தலை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, விருதுநகர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் எஸ்.பிக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கரூர் மாவட்ட எஸ்பியாக டி.என். ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்.பியாக டி.வி. கிரண் ஸ்ருதி, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பியாக சுஜித் குமார், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக என். ஸ்ரீநாதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காவல்துறையில் நடந்துள்ள இந்த மாற்றம் கவனிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு மாவட்டத்தில் நீண்ட காலம் பணியாற்றிய அதிகாரிகள் அல்லது தேர்தல் பணியில் நடுநிலையை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. புதிய எஸ்.பி.க்கள் பொறுப்பேற்றவுடன் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள 24 மணி நேரப் பறக்கும் படைகளின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவார்கள்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications