கரூர் சம்பவம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு.. தவெக தலைவர் விஜய் தந்த ரியாக்சனை பாருங்க
சென்னை: எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தன்னோட தொண்டர்களும், அப்பாவி மக்களும் இறக்குறத விரும்ப மாட்டாங்க என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் தவறான முறையில் அவதூறு பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு ரியாக்சன் தரும் வகையில் தான் வீடியோவை விஜய் வெளியிட்டிருந்தார். சிஎம் சார், பழிவாங்குறதுன்னா என்னைய என்ன வேணா பண்ணுங்க. அவங்க மேல கை வைக்காதீங்க. நான் வீட்ல இல்ல ஆபீஸ்ல தான் இருப்பேன். என்னைய என்ன வேணா பண்ணுங்க என்று கூறியிருக்கிறார்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த நெரிசல் ஏற்பட்டதில் சதி இருப்பதாக திமுகவை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டனர். ஆனால் முழுக்க முழுக்க விஜய் தாமதமாக வந்ததும், போலீஸ் கூறியதை புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா கேட்காததே காரணம் என்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பரப்பி வந்தார்கள்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், "கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி, நடக்கக்கூடாத துயரம். மருத்துவமனையில் நான் பார்த்த காட்சிகள் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன்.
செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை இழந்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நடந்த சம்பவத்துக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இதற்கிடையே, சமூக ஊடகங்களில் சிலர் பரப்பும் வதந்திகள், பொய் செய்திகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொருத்தவரை அவர்கள் நம் தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது, எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.
எனவே, விசாரணை ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். மனித உயிர்களே எல்லாவற்றுக்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லோரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழகம் எப்போதுமே பல வகைகளிலும் நாட்டுக்கு முன்னோடியாகதான் இருந்து வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின், எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தன்னோட தொண்டர்களும், அப்பாவி மக்களும் இறக்குறத விரும்ப மாட்டாங்க என்று பேசியிருந்த நிலையில், தவறான முறையில் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல் தவறான வதந்தி பரப்புவோரை கைது செய்யவும் உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் மூன்று நாள் கழித்து விளக்க வீடியா வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் வீடியோ இருந்தது. அதில் அவர் கூறும் போது, "கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.
சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன்" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்து வரும் திமுகவினர். ரசிகர்கள் தொண்டர்களா மாறனும்னு பேசிட்டிருக்கோம்... ஆனால் அதுக்கு முதலில் நடிகர் தலைவரா மாற வேண்டும் என்று விஜய்யை விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications