ஜெ. கட்டி காத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமையாக்கியாச்சு.. அடுத்து தமிழகம்தானே.. நடக்காது.. ஜோதிமணி
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமையாக்கும் பணியை எடப்பாடி பழனிச்சாமி இனிதே முடித்துவிட்டார் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.
சென்னையில் இரு நாட்கள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அவருக்கு பாஜக- அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நேற்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழா நடந்தது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும், அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் கூட்டணி குறித்து பகிரங்கமாக அறிவித்தனர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அரசு விழாவில் பாஜகவுக்கு பயந்து கொண்டு இது போன்று கூட்டணி அறிவிப்பை யாராவது செய்வார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எம்ஜிஆர்,ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை பிஜேபிக்கு அடிமையாக்கும் பணியை இனிதே முடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அடுத்து தமிழகத்தை அடிமையாக்க கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காதென கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் நிரூபித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் அதுவே நடக்கும் என தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications