ஜோதிமணிக்கு வந்ததே கோபம்.. "காங்கிரஸ் கட்சியை செந்தில் பாலாஜி அவமானப்படுத்துகிறார்.." கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் காங்கிரஸ் நிர்வாகி சமீபத்தில் திமுகவில் இணைந்த விவகாரத்தில் திமுகவின் செந்தில் பாலாஜியை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கரூர் மாவட்டச்செயலாளர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியை அவமதிக்கிறார் என்றும் இந்த அவமரியாதையை எளிதில் கடக்க முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக இருந்தவர் கவிதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கரூர் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைத்து விவாதமானது. காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் இது தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Karur MP Jothimani Slams DMK leader Senthil Balaji as Senior Congress executive joined in DMK

ஜோதிமணி கோபம்

இதற்கிடையே கரூர் எம்பி ஜோதிமணி இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காட்டமாக விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி காங்கிரஸை அவமானப்படுத்துவதாகவும் இதை எளிதாகக் கடந்து போக முடியாது என அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

அவமரியாதை

கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.

கசப்பான சம்பவங்கள்

கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் மொழி, இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும். பின்குறிப்பு: தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜி அவர்களின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி பதிவு

மேலும், அவர் செந்தில் பாலாஜியின் நீக்கப்பட்ட போஸ்ட்டின் போட்டோவையும் தனது ட்வீட்டில் இணைத்திருந்தார். அதில் தமிழ்நாடு தலைநிமிர, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா திமுகவில் இணைந்து கொண்டதாக செந்தில் பாலாஜி ட்வீட் செய்திருக்கிறார். இந்த ட்வீட்டின் போட்டோவை பகிர்ந்தே ஜோதிமணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+