சாதித்து காட்டிய சு வெங்கடேசன்.. எல்லாம் உங்களால் தான்.. நன்றி சொன்ன ஜோதிமணி.. என்ன நடந்தது?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், கரூர் தொகுதி எம்பியான ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி என ஜோதி மணி கூறியுள்ளார்.
மத்திய ரிசர்வ் படையிலுள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்தியில் வந்தது
அதில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தலா 1 இடமும் இருந்தன. தமிழ்நாட்டில் ஒரு மையம் கூட அந்த பட்டியலில் இல்லை. இது குறித்து உள்துறை இணை அமைச்சகத்திற்கும், சி.ஆர்.பி.எப் பொது இயக்குநருக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்தியில் பதில் கடிதம் எழுதியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஆங்கிலம்
இது தொடர்பாக சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத மாநிலங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என 1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 தெளிவாகக் கூறுகிறது. இன்று வரை தமிழ்நாடு அரசு இந்தியை அலுவல் மொழியாக ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளது. இதற்கான சட்டமும் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ளது.

வெங்கடேசன் கோரிக்கை
மத்திய அரசுடனான இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தும் வருகிறது. இருந்தாலும்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிகளின் கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளிக்கும் முறை தொடர்ந்து நடைபெறுகிறது.. இது அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியுள்ள உரிமைகளுக்கும், 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு வெங்டேசன் தனது மனுவில் கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றம்
இந்த வழக்கில், தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

தமிழில் கடிதம்
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசும், அதன் அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. செய்தியாக இருந்தாலும் சரி, விளக்கமாக இருந்தாலும் சரி, அதனைத் தாய்மொழியில் தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தனர்.

பலமுறை கேட்டோம்
இந்த தீர்ப்பை அடுத்து கரூர் தொகுதி எம்பியான ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை எம்பி சு வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ஒன்றியஅரசின் அமைச்சகங்கள் தமிழக எம்பிகளுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்பிவந்தன.இது சட்டவிரோதம்.எங்களில் பலருக்கு ஹிந்தி தெரியாது.பலமுறை சுட்டிக்காட்டியும் பயனில்லை. ஆகவே இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஜோதிமணி நன்றி
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் சு வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி" இவ்வாறு கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications