Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் பிரசார வாகன காட்சிகள்.. தவெக தலைமை அலுவலக நிர்வாகி குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யின் பிரசார வாகன கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் சி.பி.ஐ.யிடம் த.வெ.க. நிர்வாகிகள் நேற்று ஒப்படைத்தனர். இந்த நிலையில், இன்று தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளார். பிரசார வாகன காட்சிகள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். நூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Karur Vijay CBI

சிபிஐ தீவிர விசாரணை

விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நவீன கேமரா மற்றும் அளவீடு கருவிகளை கொண்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி வீடியோ காட்சிகள்

இதையடுத்து, கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரத்தில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே, சிபிஐ தரப்பில் கடந்த வாரம் 3-ந்தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் சென்று கரூரில் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சி பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் என சம்மன் அளித்திருந்தனர்.

சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இந்நிலையில் தவெக வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக தவெக . நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் நேற்று தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு மதியம் 12.30 மணியளவில் வருகை தந்தனர். அப்போது அவர்கள், விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்றுக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில், தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரண் இன்று சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜர் ஆனர். அவரிடம் வாகனத்தில் இருந்த பிரசார காட்சிகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஒரு மணி நேரம் விசாரணை

நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குரு சரணிடம் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணுடன் தவெக வழக்கறிஞர் அரசு மற்றும் மேலும் ஒருவர் என மொத்தம் 3 பேர் இன்று நண்பகல் அளவில் சிபிஐ அலுவலகம் சென்றனர். இன்றும் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக இன்றும் கரூர் விவகாரம் தொடபாக ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+