“நான் பார்த்துட்டுதான் இருக்கேன்..” தவெகவினரின் சோஷியல் மீடியா அஜெண்டா? முதல்வர் ஸ்டாலின் கறார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சோஷியல் மீடியாக்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம். எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கேன். விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்திருக்கிறது. மறுபுறம் இந்த விவகாரம் திமுகவின் திட்டமிட்ட சதி என தவெகவினர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

MK Stalin Tamil Nadu

வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, "இதுவரை நடக்காத துயரம், இனி நடக்க கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேர்ல போய் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மனநிலையையும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை அழைத்து, எல்லா உத்தரவையும் பிறப்பித்த பின்னரும் என்னால் வீட்ல இருக்க முடியல. உடனே அன்னைக்கு நைட்டே கரூருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்ச நிவாரணம் அறிவித்து அதை உடனடியாக வழங்கி இருக்கோம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம். நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நிதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

இதற்கிடையில் சோஷியல் மீடியாக்களில் சிலர் பரப்பும் அவதூறுகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும், தன்னுடைய தொண்டர்கள், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்துல உயிரிழந்தவங்க எந்த கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்த வரைக்கும் அவங்க நம்மோட தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்து இருக்கக்கூடிய நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது, இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துக்கணும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம்ம எல்லோருடைய கடமை. எனவே நீதியரசர் ஆணையர் அறிக்கை கிடைச்ச பிறகு, எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களிடம் ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லாரும் ஒத்துழைப்பு தருவாங்கன்னு நம்புறேன்.

மனித உயிர்களே எல்லாத்துக்கும் மேலானது. மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் என எல்லாத்தையும் விலக்கிவைத்துவிட்டு, எல்லாரும் மக்களுடைய நலனுக்காக சிந்திக்கனும்னு கேட்டுக்குறேன். தமிழ்நாடு எப்பவுமே நாட்டுக்கு பல வகைகளை முன்னோடியாகதான் இருந்திருக்கு. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம்ம எல்லோருடைய கடமை" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+