கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை?
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து 13 வயது பெண் குழந்தையையும் அந்த குடும்பம் இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடந்தது என்ன! விரைவில் கள ஆய்வு அறிக்கை வெளியாகிறது என ஆங்கில ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி காலையில் நாமக்கல்லில் முடித்துக் கொண்டு பிற்பகலில் கரூருக்கு வருவதுதான் விஜய்யின் பயண திட்டமாக இருந்தது.

ஆனால் விஜய் தனது வீட்டிலிருந்து லேட்டாக புறப்பட்டதால் நாமக்கல்லுக்கு செல்ல தாமதமானது. அது போல் மதியம் கரூருக்கு வருவதாக சொன்ன நிலையில் இரவு 7 மணிக்குத்தான் சென்றார். ஆனால் விஜய்யை கிட்ட இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காக பலர் காலையிலேயே சென்று காத்திருந்தனர்.
கடும் வெயில், பசி, தண்ணீர் கூட இல்லை, ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். அந்த கூட்டத்தில் இரவு 7 மணிக்கு வந்த விஜய்யின் பிரச்சார வாகனம் அந்த கூட்டத்தில் நுழைந்த போது நெரிசல் ஏற்பட்டது, விஜய் பேசத் தொடங்கியதும், இந்த நெரிசலில் பலர் மயங்கி விழுந்தனர்.
மயக்கம் வருவது போல் இருந்த பலரும் கூட்டத்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
விஜய்யிடமும் 3 முறை விசாரணை நடத்தப்பட்டது. அது போல் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல் குமார் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது தேர்தல் என்பதால் விசாரணையை தள்ளி வைக்க தவெக கோரியிருந்தது. இந்த நிலையில் கரூர் சம்பவம் குறித்த கள அறிக்கை விரைவில் வெளியாகும் என ஆங்கில ஊடகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
காலம் சில காயங்களை ஆற்றும் என்பார்கள், ஆனால் கரூர் நெரிசல் ஏற்படுத்திய வடு ஒருபோதும் ஆறாதது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் சிரிப்பொலியால் நிறைந்திருந்த வீடு, இன்று மயான அமைதியில் உறைந்து கிடக்கிறது.
கரூரில் நடந்த அந்தப் பெரும் நெரிசலில், தன் பிஞ்சுப் பாதங்களால் உலகை அளக்கத் தொடங்கிய 2 வயது சிறுவன் விஷ்ணு, கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தான். தன் மகனை மார்போடு அணைத்துக் காப்பாற்ற நினைத்த பெற்றோரின் கைகளிலேயே அந்த உயிர் பிரிந்தது.
மகன் இறந்த துயரம் தாங்காமல் கலங்கி நின்ற பெற்றோருக்கு, தங்களின் 13 வயது மகள் மட்டுமே ஆறுதலாக இருந்தாள். ஆனால், அந்த நெரிசல் அவளையும் விட்டுவைக்கவில்லை. வெளியே காயங்கள் ஏதும் தெரியாத நிலையில், நெரிசலில் நசுக்கப்பட்டதால் அவளது உடலில் ஏற்பட்ட உட்காயங்களால் ஒரு மாதம் மரணத்தோடு போராடிய அந்தச் சிறுமி, இறுதியில் தன் தம்பி சென்ற இடத்திற்கே சென்றுவிட்டாள்.
இரு குழந்தைகளையும் இழந்த இந்த குடும்பம் இன்று கலங்கி நிற்கிறது. இந்த நிலையில் இந்தியா டுடே நாளிதழின் நிருபர் அக்ஷிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரூர் நெரிசலில் 2 வயது சிறுவன் விஷ்ணு உயிரிழந்தான்; ஒரு மாதம் கழித்து, அதே நெரிசலில் ஏற்பட்ட உட்காயங்கள் காரணமாக அந்த குடும்பம் தங்களின் 13 வயது மகளையும் இழந்தது... கரூர் நேரடி கள அறிக்கை விரைவில்! என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆங்கில ஊடக நிருபர் எந்த அறிக்கை வெளியாகும் என்பதை சொல்கிறார் என தெரியவில்லை.
-
இது தான் தவெகவின் அஜெண்டா.. விஜய் தரப்பு வெளியிட்ட ஏழு முக்கிய திட்டங்கள் -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட் -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
"விஜய்க்கு உடல்நல பிரச்சனை? ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை" என தகவல்! அதான் பிரச்சாரம் ரத்தாம்! -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக்














Click it and Unblock the Notifications