ஆதவ் அர்ஜுனாவுக்கு NSG கமாண்டோ பாதுகாப்பு? வசமாய் சிக்கிய ஆதாரம்! கூடவே போன பாஜக முக்கிய புள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், த.வெ.க. தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று தனியார் விமானத்தில் 5 பேருடன் டெல்லி சென் நிலையில், NSG கமாண்டோ பாதுகாப்புடன் சென்றதாக வெளியாகியுள்ள தகவல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாட்டையே உலுக்கியது. கடந்த மாதம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடந்த இந்த மக்கள் சந்திப்பில் விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

விஜய் தாமதமாக வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Karur Stampede

கரூர் கூட்ட நெரிசல்

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதற்கிடையே விஜய் வீடியோ வெளியிட்ட நிலையில், அதில் அவர் பேசியது குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே திடிரென ஆதவ் அர்ஜுனா தனிவிமனத்தில் டெல்லி சென்றுள்ளார். அவர் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் நிர்வாகியாக இருக்கும் நிலையில், தேசிய விளையாட்டு போட்டிகள் காரணமாகவே அவர் டெல்லி சென்றுள்ளதாக அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா

அதேசமயம், கரூர் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்வதற்காகவும் டெல்லி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக, ஆதவ் அர்ஜுனா இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினியும் கலந்து கொள்ள உள்ளார். கரூர் சம்பவத்தை ஆராய பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று ஆய்வைத் தொடங்கிய நிலையில், "இந்த சம்பவம் சாதாரணமாக தோன்றவில்லை, இதில் உள்நோக்கம் இருக்கலாம்" என ஹேமமாலினி கூறியிருந்த நிலையில், இன்று அவர் தனது ஆய்வு அறிக்கையை அமித் ஷாவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

த.வெ.க

திமுக காவல்துறையினரையும் உள்ளூர் ரவுடிகளையும் பயன்படுத்தி திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக த.வெ.க. குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், உண்மையை மறைக்க நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சமூக விரோதிகள் கூட்டத்தில் ஊடுருவி விஜயை நோக்கி செருப்புகளும் கற்களும் எறிந்ததாகவும் த.வெ.க. குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று அமித் ஷாவுடனான ஆதவ் அர்ஜுனாவின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அமித் ஷா சந்திப்பு

இந்த சந்திப்பில் கரூர் சம்பவத்தின் அரசியல் மற்றும் சட்ட ரீதியான பாதைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் த.வெ.க. மற்றும் பா.ஜ.க. இடையே புதிய அரசியல் சமிக்ஞைகள் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதே நேரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பயணத்தில் உடன் சென்றவர்களின் விபரம் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

NSG பாதுகாப்பு

அதாவது விஎஸ்ஆர் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான வீடி- சிஎம்ஆர் என்ற தனி விமானத்தில் தான் நேற்று ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருக்கிறார். அந்த விமானத்தில் மூன்று பணியாளர்கள் இருந்திருக்கிறார்கள். மேலும், ஆதவ் அர்ஜுனாவுடன், உதயகுமார், மகேந்திரன், அருள் வெங்கடேசன் ஆகியோர் பயணித்துள்ளனர். இதில் நான்காவது மற்றும் ஐந்தாவது பயணிகளாக ரஷ்பால் சிங், கமல் ஜோஷி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டு. அவர்களது பெயருக்கு அருகே nsg என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நேஷனல் செக்யூரிட்டி கார்டு எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆதவ் அர்ஜுனாவுடன் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பாஜக பிரமுகர்

அரசியல் தலைவராக மட்டுமே ஆதார்ஜுனா இருக்கும் நிலையில் அவருக்கு மத்திய அரசு சார்பில் எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவுடன் என்எஸ்ஜி வீரர்கள் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் 2006 தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மகேந்திரனும் ஆதவ் அர்ஜுனாவுடன் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+