பனையூர் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தது ஏன்? தவெக நிர்வாகி நிர்மல் குமார் பேட்டி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சூழலில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு இன்று சிபிஐ அதிகாரி வருகை தந்தார். தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த வருகை தந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிபிஐ வந்தது ஏன்? என்னென்ன விவரங்களை கேட்டது என்பது தொடர்பாக தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சிபிஐ விசாரணை
நாட்டையே உலுக்கிய இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழு கண்காணித்து வருகிறது.
முன்னதாக கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அது போல் வேறு ஒரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
3D லேசர் ஸ்கேனர் கருவி
சிபிஐ அதிகாரிகள் கடந்த சில நாட்களாக கரூர் வேலுசாமிபுரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விஜய் பிரசார கூட்டம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுசாமிபுரம் பகுதி சிபிஐ அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிரசாரம் நடைபெற்ற சாலையில் 3D லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்யும் பணியிலும் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் கடை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தியது.
விஜய்யின் பனையூர் அலுவலகத்தில்
இந்த நிலையில், அடுத்த கட்டமாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. விஜய்யின் பிரசார வாகனத்தின் அளவு, அதில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வருகை தந்தார்.
தவெக அலுவலகத்தில் வைத்து கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஒரு மணி நேரம் கழித்து சிபிஐ அதிகாரி புறப்பட்டுச் சென்ற நிலையில், சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
நிர்மல் குமார் விளக்கம்
"சம்மன் கொடுக்கவே சிபிஐ அதிகாரிகள் வருகை தந்தனர். சிசிடிவி போன்ற பொதுவான விவரங்கள் மட்டுமே கேட்டுள்ளனர். அதை ஒரு சில நாட்களில் கொடுத்துவிடுவோம் என்று சொல்லியிருக்கிறோம். என்னென்ன விவரங்கள் தேவை என்பது தொடர்பாக ஒரு பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள். அதை கண்டிப்பாக கொடுத்துவிடுவோம்.
சம்மன் மட்டுமே கொடுத்துள்ளனர். கலந்து கொண்டவர்கள் விவரம், சிசிடிவி உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர்" என்றார். பொதுச்செயலாளர், இணை பொதுச்செயலாளரிடம் விசாரணை நடத்தப்படும் என்று சொல்லியிருந்தார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது சம்பந்தப்பட்டு வரவில்லை. விவரங்கள் மட்டுமே கேட்டுள்ளனர். பழைய எஸ்.ஐ.டியிடமே நாங்கள் விவரங்கள் கொடுத்து இருக்கிறோம். அதே விவரங்களைத்தான் கேட்டுள்ளனர். நாங்கள் அதை கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்."
3 நாட்களுக்குள் கொடுப்போம்
"சம்மன் யார் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சிடிஆர் நிர்மல் குமார், "விவரங்களை கேட்டுத்தான் சம்மன் தரப்பட்டுள்ளது. அவ்வளவுதான், மற்றபடி எதுவும் இல்லை. நாங்கள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் எதுவும் தரவில்லை.
அப்படி தந்தால் கண்டிப்பாக ஆஜராகி எங்கள் தரப்பு விளக்கத்தை கொடுப்போம். அந்த மாதிரியான சம்மன் இதுவரைக்கும் வரவில்லை. 3 நாட்களுக்குள் சிபிஐ கேட்ட தகவல்களை கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்" என்றார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications