எனக்கு நெருக்கமானவர்களுக்கா?.. ஏன் எனக்கே நேர்ந்ததே.. பாலியல் துன்புறுத்தல் குறித்து கஸ்தூரி ட்வீட்
சென்னை: பாலியல் துன்புறுத்தல்கள் எனக்கும் நேர்ந்துள்ளது என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக நடிகை பாயல் கோஷ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் முன்வைத்துள்ளார். ஆனால் பாயல் கோஷின் புகாரை காஷ்யப் மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நடிகைகளும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை பாயல் கோஷின் ட்வீட்டை நடிகை கஸ்தூரி ரீட்வீட்டு செய்துள்ளார்.

பாயல் கோஷ்
கஸ்தூரி கூறுகையில், நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். சட்டத்தின்படி உறுதியான ஆதாரம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் அல்லது அனைவரின் பெயர்களையும் அழிக்கக் கூடும். எனவே எதுவும் நல்லதல்ல என கஸ்தூரி கூறியிருந்தார்.

நெருக்கமானவர்கள்
இதை பற்றி நெட்டிசன் ஒருவர் கஸ்தூரியை கேள்வி எழுப்பியுள்ளார். அதில் இது உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், இப்படித்தான் சட்டம் பேசுவீர்களா என கேட்டிருந்தார். இதற்கு கஸ்தூரி மிகவும் பரபரப்பு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில் நெருக்கமானவருக்கு என்ன, எனக்கே அது நடந்திருக்கிறது.

ஊக்கப்படுத்தும்
மூடிய கதவுகளுக்கு பின்னர் அவை எல்லாம் அப்படி உள்ளது. எனவே பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது முழு அனுதாபம் உண்டு. ஆனால் எனது தனிப்பட்ட கருத்துகள் எல்லாம் சட்டம் இல்லை. சட்டத்தின் உரிய செயல்முறை போலி குற்றச்சாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நம்பித்தான் இருக்க வேண்டும்
அதனால் ஆதாரம் வேண்டும். அவற்றை நம்பிதான் இருக்க வேண்டும் என கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடிக்கும் நடிகை கஸ்தூரி, மிகவும் தைரியமாக மத்திய மாநில அரசுகளை எதிர்த்து வரும் நிலையில் தனக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக தற்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications